சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாயமான முதியவர் சடலமாக மீட்பு

Added : ஆக 16, 2019
Advertisement

ப.வேலூர்: செங்கப்பள்ளியில் மாயமான முதியவர், விவசாயக்கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ப.வேலூர் அடுத்த, செங்கப்பள்ளி விநாயகர் கோவில் அருகிலுள்ள விவசாயக்கிணற்றிலிருந்து, நேற்று துர்நாற்றம் வீசியது. அருகிலிருந்தவர்கள் பார்த்தபோது ஆண் சடலம் மிதப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ப.வேலூர் போலீசார் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில், சடலமாக மிதந்தது செங்கப்பள்ளியை சேர்ந்த பழனிசாமி, 75, என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட இவரை, கடந்த, 11 முதல் காணவில்லை என, இவரது உறவினர்கள், ப.வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்திருந்ததும் தெரிந்தது. தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X