பொது செய்தி

தமிழ்நாடு

நகர கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உயர்த்த முடிவு

Added : ஆக 16, 2019
Advertisement

கரூர்: கரூர் நகர கூட்டுறவு வங்கியில், தனி நபர் நகை கடன் தொகையை, 20 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர், வெங்கமேடு கிளை அலுவலகத்தில், நகரக் கூட்டுறவு வங்கி ஆலோசனை கூட்டம் நடந்தது. வங்கி தலைவர் திருவிகா தலைமை வகித்தார். கரூர் நகரக் கூட்டுறவு வங்கிக்கு புதிய கட்டடம் கட்ட, அனுமதியளித்த முதல்வர் பழனிசாமிக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் அறிவிப்பை செயல்படுத்த கூட்டுறவு கல்வி மற்றும் வளர்ச்சி நிதியில் இருந்து, 40 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடனாக அனுமதி வழங்கிய, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. வங்கியில் நகைக்கடனாக தனி நபருக்கு இதுவரை உச்சவரம்பாக, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதை, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி, வழங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் சுப்ரமணியம், உடையவர் மோகன், ராமமூர்த்தி, குருசாமி, நவநீதன், தமிழரசி ராஜேந்திரன், மல்லிகா மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X