பொது செய்தி

தமிழ்நாடு

ஈசநத்தம் பாலம், நில அளவர் அலுவலகம்; முதல்வர் காணொலி காட்சியில் திறப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

கரூர்: ஈசநத்தம் பாலம், நில அளவர் அலுவலகம் ஆகியவற்றை, முதல்வர் திறந்து வைத்தார்.
கரூர் மாவட்டத்தில், ஈசநத்தம் சாலையில் பாலம், பஞ்சப்பட்டியில் கட்டப்பட்ட நில அளவருக்கான அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடத்தை, முதல்வர் பழனிசாமி, காணொலி காட்சியில் திறந்து வைத்தார். அரவக்குறிச்சி ஒன்றியத்தில், கரூர் - ஈசநத்தம், கூம்பூர் - வேடசந்தூர் சாலையில் உள்ள பாலம், தாழ்வாக இருந்ததால், மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். புதிய பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நபார்டு திட்டத்தில், 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட முதல்வர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், 15.40 மீ. நீளம், 10.50 மீ., அகலமும் கொண்ட பாலம் கட்டப்பட்டது. இதனால் நந்தனூர், வெஞ்சமாங்கூடலூர், கரும்பரப்பு, வெடிக்காரன்பட்டி மற்றும் பாகநத்தம் செல்லும் மக்கள் பெரிதும் பயன்பெறுவர். இதேபோல் கிருஷ்ணராயபுரம் வட்டத்திலுள்ள பஞ்சப்பட்டியில், 15.36 லட்சம் ரூபாய் மதிப்பில், நில அளவருக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடம் கட்டப்பட்டது. இதையும் முதல்வர் திறந்து வைத்தார். இதையடுத்து கலெக்டர் அன்பழகன், பாலத்தை பார்வையிட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நில அளவர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடத்தை, குளித்தலை ஆர்.டிஓ., லியாகத் பார்வையிட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X