பொது செய்தி

தமிழ்நாடு

முற்றுகை தகவலால் கலெக்டர் தாமதம்: கிராமசபை கூட்டத்தில் மக்கள் தவிப்பு

Added : ஆக 16, 2019
Advertisement

கரூர்: மக்கள் முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர் என்ற தகவலால், கிராமசபை கூட்டத்துக்கு, கலெக்டர் தாமதமாக வந்ததால், முதியவர்கள் தவித்தனர்.
கரூர், லாலாப்பேட்டையில் உள்ள, ரயில்வே கேட் வழியாக, நான்கு பஞ்சாயத்துக்களை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வந்தனர். கடந்த, 2011ல் மேம்பாலம் கட்டப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டது. போராட்டம் நடத்தியதால், 2018ல் ரயில்வே குகை வழிப்பாதை அமைத்து, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பஸ், லாரி போன்ற வாகனங்கள் செல்ல முடியாததால், பாலத்தை சீரமைக்க வலியுறுத்தினர். இதை வலியுறுத்தி, கடந்த லோக்சபா தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக, கிராம மக்கள் அறிவித்தார். ஆர்.டி.ஓ., லியாகத் பேச்சுவார்த்தை நடத்தி, தேர்தல் முடிந்தவுடன் சுரங்கப்பாதை சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தார். தேர்தல் முடிந்து மூன்று மாதங்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுதந்திரதினத்தை முன்னிட்டு, கள்ளப்பள்ளியில் நேற்று கிராமசபை கூட்டத்தில், கலெக்டர் அன்பழகன் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அதில், கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இதையறிந்த அதிகாரிகள் கூட்டத்தை தாமதப்படுத்தி பகல், 1:25 மணிக்கு நடத்தினர். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.

இதுகுறித்து அரசு அலுவலர் ஒருவர் கூறியதாவது: கிராமசபை கூட்டத்தில், மக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தால், கலெக்டர் அன்பழகன் கோபப்பட்டால், தேவையற்ற பதட்டம் ஏற்படும் என்று அதிகாரிகள் நினைத்தனர். இதனால் மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ரயில்வே குகை வழிப்பாதையை சீரமைக்க வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு தருமாறு அறிவுறுத்தினர். இதை மக்கள் ஏற்றுக் கொண்ட பிறகே, கலெக்டர் அன்பழகன் கூட்டத்துக்கு வந்தார். அதில், கிராம மக்களிடம் இருந்து கோரிக்கை மனு மட்டும் பெற்று கொள்ளப்பட்டது. ஆனால், கூட்ட தீர்மானத்தில் சேர்க்காமல் ஏமாற்றி விட்டனர். ஆனாலும், இரண்டு மணி நேர தாமதத்தால் வெயிலில் அமர முடியாமல், முதியவர்கள் பரிதவித்தனர். இவ்வாறு, அவர், கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X