பொது செய்தி

தமிழ்நாடு

தெலுங்கப்பட்டியில் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு; அகற்றிட கிராம சபையில் முடிவு

Added : ஆக 16, 2019
Advertisement

குளித்தலை: தெலுங்கப்பட்டியில், அரசு புறம்போக்கு ஆற்று வாரியை ஆக்கிரமித்து, விவசாயம் செய்து வருவதால், 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியின்றி பாதித்துள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை விடுத்து, கிராமசபை கூட்டத்தில் விவாதம் நடந்தது. குளித்தலையை அடுத்த, பொருந்தலூர் பஞ்., தெலுங்கப்பட்டி பெரியண்ணசாமி கோவில் வளாகத்தில், சுதந்திர தின சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. தோகைமலை யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட நில அளவை உதவி இயக்குனர் பழனிகுமார், கூட்ட பற்றாளராக ஒன்றிய அலுவலர் பழனி கணேசன், வி.ஏ.ஓ., சிவசக்தி முன்னிலை வகித்தனர். பஞ்., செயலாளர் இளங்கோவன் தீர்மானங்களை வாசித்தார். கிராம சபை பொதுமக்கள் முறையே பழனி, மனோகர், ஜானகிராமன், பழனிசாமி ஆகியோர், தெலுங்கப்பட்டியில் அரசு புறம்போக்கு ஆற்று வாரியை அழித்து, அரசு குளத்துக்கு செல்லும் மழை நீரை, தனியார் குளத்துக்கு திருப்பி, விவசாயம் நடக்கிறது. இதனால், 100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கபட்டுள்ளன. இதுகுறித்து பொருந்தலூர் வி.ஏ.ஓ., சிவசக்தி, குளித்தலை தாசில்தார் செந்தில், தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்ரிஸ் உட்பட பலரிடம், பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை தொடர்ந்தால், பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம். தெலுங்கப்பட்டியில், வி.ஏ.ஓ., சிவசக்தி, அலுவலகத்துக்கு வருவதேயில்லை. தோகைமலையில் வந்து பார்க்குமாறு மக்களை அலைக்கழிக்கிறார். பொருந்தலூர் பஞ்.,ல், 12 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் குழாய்களை போடாமல், பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் விவாதம் செய்தனர். இதற்கு பதிலளித்த ஆணையர், தெலுங்கப்பட்டியில் அரசு புறம்போக்கு ஆற்றுவாரி ஆக்கரமிப்பு குறித்து, கரூர் கலெக்டர் உட்பட அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க, பரிந்துரை செய்யப்படும். அனைத்து புகார்கள் குறித்தும் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முடிவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X