பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஆக 16, 2019
Advertisement

சோலார் விளக்கு பழுது: கரூர்-திருச்சி நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரம் பிரிவு சாலை, நெடுஞ்சாலை துறை சார்பில், சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. பழுது ஏற்பட்டு, எரியாமல் கிடப்பில் உள்ளது. இதனால் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து திரும்போது, போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்குகின்றனர். மணவாசி நெடுஞ்சாலை துறையினர், விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பைதொட்டி சேதம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கம்மநல்லூர் பஞ்., கிராம சேவை கட்டடம் அருகில், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக குப்பை தொட்டிகள், சேதம் ஏற்பட்டதால், தலைகீழாக கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் குப்பை கொட்ட முடியாமல், வீடுகள் முன்பும், சாக்கடை கழிவுநீர் செல்லும் வழியில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தொட்டிகளை முறையாக வைக்க வேண்டும்.

எரியாத விளக்கு; இரவில் பாதிப்பு: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் கட்டளை இரட்டை வாய்க்கால் அருகில், பஞ்., நிர்வாகம் மூலம், தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டளை வாய்க்கால் வழியாக, வாகன ஓட்டிகள் அச்சமின்றி சென்று வந்தனர். ஒரு வாரமாக ஒரு தெருவிளக்கு உடைந்து தொங்குகிறது. இதனால் விளக்கு எரியாமல், வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர். தெருவிளக்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழாய் உடைப்பால் குடிநீர் வீண்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, மேட்டுமகாதானபுரம் சாலை வழியாக, காவிரி ஆற்றில் இருந்து, கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மேட்டு மகாதானபுரம் சாலையில், குழாயில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் பழையஜெயங்கொண்டம் கிராம பகுதிக்கு, குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குழாய் ஓட்டை இணைப்புகளை, பஞ்., நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

வாய்க்காலில் செடியால் சிக்கல்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, கம்மநல்லூர் கிராமத்தில் இருந்து, சிந்தலவாடி பாசன வாய்க்கால் செல்கிறது. வாய்க்காலில் அதிகமான நாணல் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் கிளை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கும்போது கடைமடை வரை, தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வாய்க்காலில் வளர்ந்து வரும் செடிகளை முற்றிலும் அகற்றி தூய்மைபடுத்த, உரிய நடவடிக்கையை பஞ்., நிர்வாகம் எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X