பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிவு

Added : ஆக 16, 2019
Advertisement

பென்னாகரம்: கர்நாடக அணைகளிலிருந்து, உபரி நீர் குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில், 30 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவமழை குறைந்ததால், கர்நாடகா அணைகளுக்கு வரும் உபரி நீரும் குறைந்துள்ளது. இதனால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளிலிருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, 60 ஆயிரம் கன அடியாக வந்த நீர்வரத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, 40 ஆயிரம் கன அடியாக குறைந்தது. படிப்படியாக குறைந்து, மாலை, 5:00 மணிக்கு, 30 ஆயிரம் கன அடியானது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி, ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் செந்நிறத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எட்டாவது நாளாக, ஒகேனக்கல் காவிரியில் குளிக்க, பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X