பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி பெண் எம்.எல்.ஏ.,வுக்கு செக் மோசடி வழக்கில் சிறை

Added : ஆக 16, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: காசோலை மோசடி வழக்கில், முன்னாள், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போது மாநில மகளிரணித் தலைவியாகவும் உள்ளவர் காஞ்சனா கமலநாதன், 64; இவர் கடந்த, 2015 அக்.,7ல், காவேரிப்பட்டணம் பெண்ணேஸ்வரமடத்தை சேர்ந்த தேவி, 43, என்பவருக்கு, 23 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்துள்ளார். வங்கியில் பணமில்லாததால் திரும்பியது. கடந்த, 2016 ஜன.,29ல், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில், தேவி வழக்கு தொடர்ந்தார். வழக்கின் தீர்ப்பு கடந்த, 13ல் வழங்கப்பட்டது. காசோலை மோசடியில் ஈடுபட்டதாக, காஞ்சனா கமலநாதனுக்கு, ஓராண்டு சிறை, தேவிக்கு வழங்க வேண்டிய, 23 லட்சம் ரூபாயை வழங்கவும், நீதிபதி தீர்ப்பளித்தார். பணம் செலுத்த தவறினால், மேலும் ஒரு மாத சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். ஏற்கனவே, கடந்த ஜனவரியில், கிருஷ்ணகிரியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு, 24 லட்சம் ரூபாய்க்கான காசோலை மோசடி வழக்கில், கிருஷ்ணகிரி நீதிமன்றம், காஞ்சனா கமலநாதனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X