சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடை விற்பனையாளர் கொலை; ரூ.1.50 லட்சம் கொள்ளை

Added : ஆக 16, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: டாஸ்மாக் கடை விற்பனையாளரை கொலை செய்த மர்ம ஆசாமிகள், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
கிருஷ்ணகிரி அருகே, பேட்டப்பனூரில், டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணியாற்றி வந்தவர் ராஜா, 43; திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். கடை மேற்பார்வையாளராக, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன், 42, உள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடை மூடும் நேரத்தில், மர்ம ஆசாமிகள் சிலர், கடைக்கு வந்தனர். மது பாட்டில்களை மொத்தமாக கேட்டுள்ளனர். இதனால், விற்பனையாளர் ராஜா, கடையின் உள்பகுதிக்கு சென்றார். அப்போது, கடைக்குள் புகுந்த ஆசாமிகள், அவரை கத்தியால் குத்தியதால், சம்பவ இடத்தில் பலியானார். மது பாட்டில்கள், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். வெளியே சென்றிருந்த மேற்பார்வையாளர் ஜெகநாதன், கடைக்கு வந்தபோது, ராஜா கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ந்தார். குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.பி., பண்டிகங்காதர், டி.எஸ்.பி., குமார், குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கொலை நடந்திருக்கலாம் என, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X