சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்னி வேன் மீது லாரி மோதல்: 2 பெண்கள் பலி: 5 பேர் காயம்

Added : ஆக 16, 2019
Advertisement

ஓசூர்: சூளகிரி அருகே, ஆம்னி வேன் மீது கன்டெய்னர் லாரி மோதியதில், இரு பெண்கள் பலியாகினர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, பன்னார்கட்டா சாலை, ஹரிகரா பி.டி.எஸ்., லே-அவுட்டை சேர்ந்தவர் நாகபூஷணம், 50; இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினர்களான அம்பிகா, 38, ஹேமலதா, 40, சர்வமங்களா, 48, வித்யா, 25, சுமித்ரா, 45, லதா, 38, ஆகியோருடன் ஆம்னி வேனில், திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று விட்டு, பெங்களூரு திரும்பினர். நாகபூஷணம் காரை ஓட்டினார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், காமன்தொட்டி அருகே, நேற்று அதிகாலை, ?:?? மணிக்கு சென்றது. முன்னால் ஜல்லி ஏற்றி லாரி திடீரென நிறுத்தினார். இதனால், லாரி மீது மோதாமல் இருக்க, நாகபூஷணம் ஆம்னி வேனை நிறுத்தினார். அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, ஆம்னி வேன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த அம்பிகா, ஹேமலதா சம்பவ இடத்தில் பலியாகினர். சர்வமங்களா, வித்யா, சுமித்ரா, லதா மற்றும் கன்டெய்னர் லாரி ஓட்டுனரான தூத்துக்குடி, அகிலாண்டபுரம் பகுதியை சேர்ந்த ஏட்டுராஜ், 32, காயமடைந்தனர். அனைவரும் மீட்கப்பட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X