சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் அருகே பரிதாப விபத்து: டிரைவர், கல்லூரி மாணவர் பலி

Added : ஆக 16, 2019
Advertisement

எலச்சிபாளையம்: வையப்பமலை அருகே, எதிரே வந்த கார் மீது மோதி, சாலையில் விழுந்த இருவர் மீது, ஆம்னி வேன் ஏறி இறங்கியதில், இருவரும் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், வையப்பமலை அடுத்த, பொன்குறிச்சியை சேர்ந்த ஆனந்த் மகன் ஜெயபிரதாப், 22; கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் மகன் பாரத்குமார், 23; பொறியியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர். இருவரும் வையப்பமலையில் இருந்து வீட்டுக்கு, சுசூகி பைக்கில் நேற்று சென்றனர். மதியம், 1:00 மணியளவில், சென்னம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே, முன்னால் சென்ற ஆம்னி வேனை கடக்க முயன்றபோது, எதிரே வந்த பொலீரோ கார் மீது மோதினர். நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த ஆம்னி வேன், இருவர் மீதும் ஏறி இறங்கியதில், இருவரும் உடல் நசுங்கி பலியாகினர். விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X