பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலையில் ரூ.2.61 தள்ளுபடி: 73வது சுதந்திர தினத்தில் ஐ.ஓ.சி., அதிரடி

Added : ஆக 16, 2019
Advertisement

சேலம்: சுதந்திர தினத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம், பெட்ரோலுக்கு லிட்டருக்கு, 2.61 ரூபாய் தள்ளுபடி வழங்கியது. நாட்டின், 73வது சுதந்திர தினம், நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், டீலர்களுடன் கைகோர்த்து, பெட்ரோலுக்கு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, நேற்று, 75.61 ரூபாய் என, விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 2.61 ரூபாய் தள்ளுபடி செய்து, 73 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தள்ளுபடி தொகையில், 1.61 ரூபாயை, இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்க, ஒரு ரூபாயை, டீலர்கள் ஏற்றனர். இச்சலுகை, சேலத்தில் ஆறு பெட்ரோல் பங்க்குகளில் அமல்படுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும், 1,009 பங்க்குகளில் சலுகை வழங்கப்பட்டதாக, நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X