பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 111 அடியாக உயர்வு

Added : ஆக 16, 2019
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், 111 அடியாக உயர்ந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம், வினாடிக்கு, 48 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து, 50 ஆயிரம் கனஅடியாக நேற்று உயர்ந்தது. வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி நீர், பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. அதேசமயம் நேற்று முன்தினம், 108.92 அடியாக இருந்த நீர்மட்டம், 111 அடியாக நேற்று உயர்ந்தது. அதேபோல், 77 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு, 80 டி.எம்.சி.,யானது. அணை நிரம்ப, இன்னும், 13.5 டி.எம்.சி., நீர் தேவை. இதே நீர்வரத்து தொடர்ந்தால், ஐந்து நாளில் அணை நிரம்பும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X