பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.303 கோடி வருவாய்

Added : ஆக 16, 2019
Advertisement

சேலம்: ''சேலம் ரயில்வே கோட்டம், நடப்பு நிதியாண்டில், 303 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது,'' என, கோட்ட மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில், கோட்ட மேலாளர் சுப்பாராவ், தேசியக்கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: சேலம் ரயில்வே கோட்டம், நடப்பு நிதியாண்டில், 303.48 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. சரக்கு போக்குவரத்தில், 23.60 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டை ஒப்பிடும்போது, பல மடங்கு அதிகரித்துள்ளது. பயணியர் மூலம், 197.47 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட, 8.29 சதவீதம் அதிகம். சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், இம்மாத இறுதிக்குள், கூடுதலாக ஒரு எஸ்கலேட்டர், ஒரு லிப்ட் இயக்க, நடவடிக்கை எடுக்கப்படும். வரும், 2025க்குள், அனைத்து ரயில்வே கேட்டுகளை மூட, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் கோட்டத்தில், முதல்கட்டமாக, 36 கேட்டுகள் மூடப்படவுள்ளன. இதுவரை, 4 கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X