பொது செய்தி

தமிழ்நாடு

பரோல் நீட்டிப்புக்கு மனு; நளினி முடிவு

Added : ஆக 16, 2019
Advertisement

வேலூர்: பரோல் நீட்டிப்பு செய்ய, நளினி மனு கொடுக்கவுள்ளதாக, அவரது தாய் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மகள் அரித்திரா திருமணத்துக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி கடந்த மாதம், 25ல், 30 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். சத்துவாச்சாரியில் தங்கி, போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார். லண்டனில் உள்ள, மகள் அரித்திரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்க, மனு கொடுக்க நளினி முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவரது தாய் பத்மா, நேற்று கூறியதாவது: லண்டனில் உள்ள அரித்திராவுக்கு செப்., வரை தேர்வு உள்ளது. இதனால் தேர்வு முடிந்த பிறகே, தமிழகம் வரவுள்ளார். இதனால், மேலும் ஒரு மாதம் நளினிக்கு பரோல் நீட்டிப்பு செய்ய, நளினி மனு கொடுக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து வேலூர் சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்க வேண்டுமானால், நீதிமன்றத்தில் தான், நளினி மனுதாக்கல் செய்ய வேண்டும். பரோல் நீடிப்பு குறித்து, சிறைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நீதிமன்றம் பரோல் நீட்டிக்கா விட்டால் வரும், 25 மாலை, 6:00 மணிக்குள், நளினி வேலூர் மகளிர் சிறைக்கு திரும்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X