பொது செய்தி

தமிழ்நாடு

வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிப்பு: முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு

Added : ஆக 16, 2019
Advertisement

வேலூர்: வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து, சுதந்திர தினவிழாவில் முதல்வர் அறிவித்ததற்கு, வேலூர் மாவட்ட மக்கள், மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், 13 சட்டசபை தொகுதிகளை கொண்டுள்ளது. இதை மூன்றாக பிரிக்க பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த, 73வது சுதந்திர தினவிழாவில், முதல்வர் பழனிசாமி வேலூர் மாவட்டம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என, மூன்றாக பிரிக்கப்படும் என அறிவித்தார். இதற்கு வேலூர் மாவட்ட மக்கள், சமூக ஆர்வலர்கள், கட்சி பிரமுர்கள் வரவேற்று மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு தொழில் கல்வி ஆசிரியர் கழக, மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன்: பல்வேறு பிரச்னைகளுக்காக மக்கள், 100 கி.மீ., தூரத்துக்கு பல ஆண்டுகளாக அலைந்து கொண்டிருந்தனர். இனி அந்த பிரச்னை இல்லை. மக்களுக்கு நிம்மதி. வளர்ச்சி பணிகள் வேகமாக நடக்கும்.


தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க, மாநில கவுரவ தலைவர் ராஜவேலு: புதியதாக ஒரு மாவட்டத்தை உருவாக்க, 500 கோடி ரூபாய் நிதி செலவாகும். உடனடியாக நிதியை ஒதுக்கி சிறப்பு அதிகாரிகளை நியமித்து, மாவட்டத்தை பிரிக்கும் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.


அணைக்கட்டு சமூக ஆர்வலர் சுப்பிரமணி: வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்தும், கே.வி.குப்பத்தை தாலுகாவாக அறிவித்ததற்கும், முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம். விரைவில் அதிகாரிகளை பிரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பினால், மக்கள் சிரமமின்றி அணுகி, தங்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக இருக்கும்.


ராணிப்பேட்டை விவசாயி ராஜா: விவசாயிகள் பிரச்னைகள், குறைதீர் கூட்டங்களுக்காக வேலூர் வர நிறைய செலவாகிறது. ஏற்கனவே, கடனில் உள்ள விவசாயிகள் இதனால் மேலும் நஷ்டப்பட்டனர். வேலூரை மூன்று மாவட்டமாக பிரித்து அறிவித்ததால், இனி விவசாயிகள் சிரமமின்றி அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கு சென்று, குறைகளை தெரிவிப்பர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X