பொது செய்தி

தமிழ்நாடு

அத்தி வரதர் தரிசனத்தை நீட்டிக்க புவனேஸ்வரி பீடாதிபதி கோரிக்கை

Added : ஆக 16, 2019
Share
Advertisement

சேத்துப்பட்டு: ''அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும்,'' என, புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டம் கடும் வறட்சியால், விவசாயம் கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு, தேவிகாபுரத்தில், மாதங்கி பகலாமுகி பாலா தசமகா வித்யா பீடத்தில், புஷ்பாஞ்சலி நேற்று நடந்தது. சென்னை, அம்பத்தூர் புவனேஸ்வரி பீட, பரமஹம்சர் பரத்வாஜ் சுவாமிகள் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, பரத்வாஜ் சுவாமிகள் பேசியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும் நம்பிக்கை என்பது அவசியம். அது இருந்தால்தான், நாம் இறைவனை அடைந்து, அனைத்தையும் பெறமுடியும். காஞ்சிபுரத்தில், அத்தி வரதர் வழிபாடு நடந்து வருகிறது. லட்சோபலட்சம் மக்கள் தினமும் தரிசித்த வண்ணம் உள்ளனர், இருப்பினும் பக்தர்கள் நலன் கருதி, தரிசனத்தை காலநீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X