பொது செய்தி

இந்தியா

அடுத்த 2 நாளுக்கு தமிழகத்தில் கனமழை வாய்ப்பு

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.latest tamil newsஇந்திய வானிலை மையம் இன்று (ஆக.,16) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கிழக்கு ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீரில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உத்தரகாண்ட், இமாச்சல், பஞ்சாப், அரியானா, டில்லி, உ.பி., கோவா, குஜராத், ம.பி., அந்தமான், தமிழகம், கேரளா, மாஹே, தெற்கு உள் கர்நாடகா, மேற்குவங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil newsதமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஒடிசாவில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும், வட மாநிலங்களில் படிப்படியாக மழை குறையும், காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என்பதால் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
16-ஆக-201913:46:27 IST Report Abuse
atara They can stop ing in the Grand Anikut instead they can divert to Kolereon and the Sub Cannals around so ground water absorbsion use. Also in Tanjore Zone to Kumbakonam they can block most of the Small Cannals also Sand Bariciades can be done every half a kilometers in the Cannal so that water is blocked and allows for ground water absorbsion.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
16-ஆக-201911:27:16 IST Report Abuse
A.George Alphonse நாளை கல்லணையில் தண்ணீர் திறக்கிறார்கள். இந்த மழை நீர் ஓடிவரும் நீரில் கலந்து வீணாக கடலில் கலக்குமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X