சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம் விவசாயி பலி

Added : ஆக 16, 2019
Advertisement

விழுப்புரம்: வேலுார் மாவட்டம், கனக சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன், 26; விவசாயி. இவர், வெங்காயத் தாள் வாங்குவதற்காக, கடலுாருக்கு, நேற்று முன்தினம் இரவு, வேனில் சென்றார். அவருடன், நண்பர்கள் இருவர் சென்றனர். 23 வயது டிரைவர், ஓட்டினார்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி - சேத்பட் சாலையில், வணக்கம்பாடி அருகே, இரவு, 11:45 மணியளவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள, 20 அடி ஆழ கிணற்றில் மோதி கவிழ்ந்தது. இதில், மோகன், வேனில் இருந்து துாக்கி வீசப்பட்டு, கிணற்றுக்குள் விழுந்து இறந்தார்.வேனில் இருந்த மற்ற மூவரும் படுகாயம் அடைந்து, வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X