காஷ்மீரில் கட்டுப்பாடு: நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
Kashmir,Supreme Court,காஷ்மீர்,சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: காஷ்மீரில் மீடியாக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க அரசுக்கு அவகாசம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஷர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கோகோய், பாப்தே, நஜீர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, தலைமை நீதிபதி கோகோய் கூறுகையில், இது என்ன வழக்கு? விசாரணைக்கு உகந்தது அல்ல. என்ன மாதிரியான வழக்கு எனவும் புரிந்து கொள்ள முடியவில்லை. மனுவை தள்ளுபடி செய்ய உகந்தது. ஆனால், பதிவாளர் முன்பு 5 வழக்குகள் உள்ளன.
இந்த மனுவை அரை மணி நேரம் படித்து பார்த்தும், என்ன மாதிரியான வழக்கு என புரிந்து கொள்ள முடியவில்லை. பிழைகளை சரி செய்துவிட்டு மனு தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.


latest tamil news




தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், நாளுக்கு நாள் காஷ்மீரில் நிலைமை மேம்பட்டு வருகிறது. பாதுகாப்புஅமைப்புகள் நிலைமையை ஆராய்ந்து வருகின்றன. உண்மை சூழ்நிலை எங்களுக்கு தெரியும். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன என்றார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் கூறுகையில், காஷ்மீரில் மீடியாக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்க மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்க விரும்புகிறோம். காஷ்மீரில் தரைவழி தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம், காஷ்மீர் ஐகோர்ட் தலைமை நீதிபதி எங்களை தொடர்பு கொண்டார். இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் இணைத்து விசாரிக்கிறோம் எனக்கூறி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prem Kumar - Bangalore,இந்தியா
16-ஆக-201917:32:00 IST Report Abuse
Prem Kumar சிதம்பரம் காஷ்மீர் விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசும்போது அருகாமையில் தான் உச்ச நீதி மன்றம் இருப்பதாகவும் அங்கு சரியான தீர்ப்பு கிடைக்கும் என்றும் கூறினார் . இன்று அதே உச்ச நீதிமன்றம் பத்திரிக்கைகளுக்கு விடுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு நீக்க அரசுக்கு kaala அவகாசம் தந்ததுடன் மற்ற அரசின் முடிவுகளுக்கு எந்தவித உத்தரவும் பிற்பிக்காமல் மறு தேதியும் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்து விட்டது .
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஆக-201917:12:37 IST Report Abuse
Endrum Indian ஆகமொத்தம் இந்த வழக்கை தள்ளுபடி செய்யவில்லை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரணை???
Rate this:
Cancel
16-ஆக-201916:16:43 IST Report Abuse
ஆப்பு காஷ்மீர் நித்யகண்டம் பூர்ண ஆயுசு...
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
16-ஆக-201917:29:01 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇதுவரை காஷ்மீரை அப்படித்தானே வைத்திருந்தன அந்நிய சக்திகளும், அயல்நாட்டு கட்சியும். கவலை வேண்டாம். நிலைமை மாறும் நல்லவர்கள் நாடாள்வதால்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X