சந்திரபாபு வீட்டுக்குள் வெள்ளம்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

ஐதராநாத் : ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் பெருக்கெடுத்த வெள்ளநீர், ஆற்றங்கரையில் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் வீட்டிற்குள் புகுந்தது.latest tamil news


கிருஷ்ணா நதிக்கரையில் வெள்ள அபாயம் ஏற்படும் என்பதால் 22.6 மீட்டர் தூரத்திற்குள் எந்த கட்டிடங்களும் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் விஜயவாடா அருகே உந்தவள்ளி பகுதியில் கிருஷ்ணா நதிக்கரையில் விதிகளை மீறி 19 மீட்டருக்குள் சந்திரபாபு நாயுடு வீட்டை கட்டி உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றதும், விதிகளை மீறி கட்டிய வீட்டை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.


latest tamil news


இருந்தும் வீட்டை காலி செய்ய மறுத்து, தொடர்ந்து அதே வீட்டில் வசித்து வந்தார் சந்திரபாபு நாயுடு. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் சந்திரபாபு நாயுடு இந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த நீர் ஆற்றுக்கு அருகே கட்டப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்குள் புகுந்தது. தரைத்தளத்தில் இருந்த பொருட்கள் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டன. நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால் வேறு வழியின்று, ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து குடும்பத்துடன் வெளியேறிய சந்திரபாபு நாயுடு, ஐதராபாத்திற்கு சென்றார்.


latest tamil newsகிருஷ்ணா நதியில் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால் குண்டூர், கிருஷ்ணா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குண்டூர் மாவட்டத்தில் மட்டும் 21 கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஆக-201920:46:46 IST Report Abuse
Ramesh Sargam நதிக்கு தெரியுமா அது ஒரு அரசியல்வாதியின் வீடு என்று. நதிக்கு அரசியல்வாதியும், ஆண்டியும் ஒன்றுதான்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-ஆக-201915:44:03 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவரும் தெலுங்கர்.....ஜப்பான் துணைமுதல்வரும் தெலுங்கர் எனவே..... ஊழலில் அரசு நிலத்தை ஆட்டைய போடுவதில், ஆக்கிரமிப்பு செய்வதில்...... இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது...
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-ஆக-201919:06:49 IST Report Abuse
Rajasஅது தனியாருக்கு சொந்தமான லீசுக்கு எடுத்த இடம்....
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-ஆக-201919:21:58 IST Report Abuse
Rajasஇந்த இடம் சந்திரபாபு நாயுடுவின் இடமோ அல்லது அரசாங்கத்தின் இடமோ இல்லை. இது தனியார் ஒருவரிடமிருந்து லீசுக்கு பெறப்பட்டது. கிருஷ்ணா நதியின் கரையின் மீது ஆயிரக்கணக்கான கட்டடங்கள் விதி மீறி கட்டப்பட்டாலும் (பல ராஜசேகர ரெட்டி காலத்தில் கட்டப்பட்டது) இந்த கட்டடத்திற்கு மட்டுமே நோட்டீஸ் தரப்பட்டது. கோர்ட்டுக்கு போனால் பிரச்சினை என்று அரசு அதிகாரிகள் பயந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் சந்திரபாபு தரப்பு இந்த விவகாரத்தில் அலட்டிக்கொள்ளவில்லை. காலி செய்யவுமில்லை. Wind Generation Power விலை மற்ற மாநிலங்களை விட ஆந்திராவில் அதிகமாக இருக்கிறது அதனால் 2636 கோடி நஷ்டம் என்று ஜெகன் அடுத்த தமாஷ் செய்ய ஆரம்பித்தார். ஆனால் மத்திய மின்சார Ministry ஒவ்வொரு மாநிலங்களிலும் காற்றின் வேகம் வேறு வேறு அதனால் Compare செய்வது சரியில்லை என்று சொல்லி விட்டார்கள். Wind Generation கம்பனிகள் வேறு கோர்ட்டில் வழக்கு போட்டு விட்டார்கள்....
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
16-ஆக-201915:06:56 IST Report Abuse
Subburamu Krishnaswamy It shows that Mr Naidu is not a law abiding citizen. He is misusing his official power. A lawmaker cannot be a law breaker. Will the courts take this case voluntarily as done in earlier or remain as a mute spectator. If any interim stay is given To Mr Chandrababu that stay has to be removed immediately without waiting for government response. Law of the land is only for weaker section in India and not for these NETAS traitors of the nation. Worst enemy to Indian constitution as he had misused the chief minister power.
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-ஆக-201920:43:13 IST Report Abuse
RajasHave you understood the real issue? Neither the house, where babu has been living, a Government Property nor constructed in the Government owned land. Further the property does not belong to Naidu. He had taken the house on lease basis from an Individual. Thousands of houses like this house, have been built in the river bank of Krishna, ignoring the River conversion Act. Most of the houses were built in the regime of Rajasekara Reddy, the father of Jagan. Instead of taking action against all violators, Jagan tried to focus, only on the house, where chandrababu living. Chandra babu Naidu is also waiting for the movement of the Government in his favour, but Government officials fear of Court interference....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X