விமானத்தை வயலில் தரை இறக்கி 233 பேரை காப்பாற்றிய விமானி

Added : ஆக 16, 2019
Advertisement

மாஸ்கோ: ரஷ்யாவில், 233 பயணியருடன் பறந்த விமானம், திடீரென கோளாறு ஏற்பட்டு, மக்காச்சோள வயலில் தரையிறங்கியது. விமானியின் சாதுர்யத்தால், அதிலிருந்த யாரும் உயிரிழக்கவில்லை; பலர் லேசான காயம் மட்டுமே அடைந்தனர்.

ரஷ்ய தலைநகர், மாஸ்கோவிலிருந்து, முன்னர், அண்டை நாடாக இருந்து, இப்போது ரஷ்யாவுடன் இணைந்துள்ள, கிரிமியாவின், சிம்பெரோபோல் நகருக்கு, 'ஏர்பஸ் - 321' விமானம், நேற்று காலை புறப்பட்டது. 'யூரல்' விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான அதில், 233 பயணியர் இருந்தனர். அந்த விமானம், தரையில் வேகமாக ஓடி, வானில் எழும்பி, சில, ௧௦௦ மீட்டர் உயரத்தில் பறந்த போது, பறவைகள் கூட்டம் மீது, எதிர்பாராத விதமாக மோதி விட்டது. இன்ஜினில் பறவைகள் புகுந்து விட்டதால், அவை செயலிழந்து விட்டன. விமானத்தை, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர விமானி எவ்வளவோ முயன்றார். எனினும், அந்த விமானம் தாறுமாறாக பறந்து, வேகமாக கீழிறங்கியது.

மாஸ்கோ நகரின் தெற்கு பகுதியில், மக்காச்சோளம் பயிரிடப்பட்டிருந்த, நீண்ட துார வயல் வெளியின் மேல் பறந்த போது, சக்கரங்களை இயக்காமல், அப்படியே மெதுவாக, வயல் வெளியில் விமானத்தை ஓட விட்டு, விமானி சாதுர்யமாக நிறுத்தி விட்டார்.உடனடியாக விமானத்திலிருந்த பயணியர், அவசர கதவுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இந்த களேபரத்தில், 23 பயணியருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டது. எனினும், பயணியர் யாரும் உயிரிழக்கவில்லை. உயிர் தப்பியவர்கள், விமானியை பாராட்டினர்.

அவரின் இந்த துணிகர செயலை, 2009ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஹட்சன் நதியில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய அமெரிக்க விமானி, சல்லி சால்லன்பெர்கர் சாகசத்தோடு பலர் ஒப்பிட்டனர். அந்த விபத்தில், இரண்டு இன்ஜின்களும் செயலிழந்த நிலையில், பிரமாண்ட கட்டடங்களில் மோதாமல் தவிர்க்க, அந்த விமானத்தை, ஹட்சன் ஆற்றில் இறக்கி ஓடவிட்டு, உயிர் பலியை தவிர்த்தார், விமானி சல்லி!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X