கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் தரிசனம்: நீட்டிக்க உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
அத்திவரதர், தரிசனம், ஐகோர்ட், சென்னை ஐகோர்ட்,

சென்னை: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசன நாட்களை நீட்டிக்க உத்தரவிட ஐகோர்ட் மறுத்துவிட்டது.

தென்னிந்திய ஹிந்து மகா சபாவின் நிர்வாகி வசந்தகுமார் தாக்கல் செய்த மனு: அத்தி வரதரை தரிசனம் செய்ய, தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள், காஞ்சிபுரத்திற்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், முதியோரால், அத்தி வரதரை எளிதில் தரிசிக்க முடியவில்லை. ஆர்வமுடன் சென்ற நானும், தரிசிக்க முடியாமல், கனத்த இதயத்துடன், வீட்டுக்கு திரும்பினேன்.
மத வழிபாட்டு உரிமையில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, 1703ல், குளத்தை சுத்தம் செய்தபோது, அத்தி வரதர் சிலையை கண்டெடுத்தனர். 1979ல் குளத்தில் இருந்து சிலையை வெளியே எடுத்தபோது, 23 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். கூட்டத்தை கருதி, 40 நாள் என்பதை, 48 நாட்களாக நீட்டித்தனர். எனவே, 48 நாட்கள் மட்டுமே, அத்தி வரதர் சிலை வெளியில் இருக்க வேண்டும் என்பதற்கு, எந்த ஆகம விதிகளும் இல்லை.

தற்போது, தினசரி, லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவதால், மக்களின் உணர்வுகளை மதித்து, தரிசன நாட்களை நீட்டிக்க வேண்டும். அதனால், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையை எடுக்கவும், 48 நாட்கள் மட்டுமே, வசந்த மண்டபத்தில் வைத்திருக்க வேண்டும் என, எந்த கண்டிப்பான விதிகளும் இல்லை.
அதிக கூட்டம், பக்தர்களின் நலன்களை கருதி, 48 நாட்களை, மேலும் நீட்டிக்க வேண்டும். எவ்வளவு நாட்கள் நீட்டிப்பு என்பதை, அரசு முடிவு செய்து கொள்ளலாம். இது குறித்து, ஆக., 8ல், தலைமை செயலருக்கு மனு அளித்தேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, மனுவின் அடிப்படையில், தரிசன நாட்களை மேலும் நீட்டிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பிலும் அத்திவதர் தரிசனத்தை நீட்டிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆகமவிதிபடி, 48 நாட்களில் அத்திவரதரை குளத்தில் வைப்பது மரபு. முன்னர் அதே நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெரிவித்தார்.


latest tamil newsதமிழக அரசின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதிகள், அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீட்டிக்க உத்தரவிட முடியாது. மரபு, வழிபாடு நடைமுறைகளின்படியே அத்திவரதர் தரிசனம் 48 நாட்கள் நடக்கிறது. கோவில்களின் மரபு, வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஆக-201920:12:56 IST Report Abuse
Sampath Kumar இப்பதான் உங்க ஆட்சி நடக்குதல அப்புறம் எப்படி காங்கிரஸ் ஆங்கே வந்தது
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
16-ஆக-201918:00:19 IST Report Abuse
oce இன்னும் தமிழக ஆலயங்களில் உள்ள தீர்ரத்தங்களில் எத்தனையோ கடவுள் சிலைகளை மறைத்திருக்கலாம் ஆலய தீர்த்தங்கள் குளங்களில் உள்ள நீரை முழுமையாக இறைத்து சேற்றை வாரினால் ஏராளமான தமிழக பாரம்பரிய கடவுள் சிலைகள் வெளிப்படும் என்பது நிச்சயம்.. இந்த சமய அறநிலைய துறை இதை செய்யுமா.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
16-ஆக-201917:56:18 IST Report Abuse
oce மற்ற மதங்களில் ஆகம விதிகள் இல்லையா. அங்கெல்லாம் வெளிநாட்டு பணம் புரளவில்லையா எஸ்டிகே தாமோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X