பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை இன்று தரிசிக்கலாம்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிப்பதற்கான விஐபி, விவிஐபி பாஸ்கள் இன்று (ஆக.,16) ரத்து செய்யப்பட்டுள்ளதால், கூட்டம் குறைவாக காணப்படுகிறது. அதனால் இதுவரை அத்திவரதரை தரிசிக்காத பக்தர்கள் இன்று சென்று தரிசிக்கலாம்.latest tamil newsகாஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஜூலை 1 ம் தேதி துவங்கிய அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. 40 ஆண்டுகளுக்கு பின் அனந்தசரஸ் திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கும் அத்திவரதர் ஜூலை 1 ம் தேதி துவங்கி, முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வருகிறார். 48 நாட்கள் நடக்கும் அத்திவரதர் வைபவம் இன்றுடன் நிறைவடைகிறது. 48 வது நாளாவது நாளான நாளை (ஆக.,17) காலை துவங்கி அத்திவரதருக்கு 6 கால பூஜைகள் ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. அதன் பிறகு அத்திவரதரை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெறும். நாளை மாலை அல்லது இரவு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவதால் நாளை பக்தர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.


latest tamil news


அத்திவரதரை இதுவரை ஒரு கோடியே 4 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து சென்றுள்ளனர். இந்நிலையில் கடைசி நாளான இன்று, விஐபி மற்றும் விவிஐபி.,க்கள் தரிசனம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரத்தில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் இதுவரை அத்திவரதரை தரிசிக்காதவர்கள் இன்று சென்று தரிசனம் செய்யலாம். நாளை அனந்தசரஸ் குளத்திற்குள் செல்லும் அத்திவரதர், மீண்டும் 2059 ம் ஆண்டே திருக்குளத்தில் இருந்து வெளிப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAJAN S - PONDICHERRY,இந்தியா
16-ஆக-201919:30:25 IST Report Abuse
RAJAN S நாங்கள் ஆன்லைன் டிக்கெட் (300 ரூபாய் ) புக் செய்து 14 ம் தேதி வந்தோம் . அன்று காலையில் 10மணியில் இருந்து வி ஐபி, டோனர் பாஸ் தரிசனத்துக்கு யாரும் அனுமதிக்கப்படாததால் பயங்கரமான கூட்டம் . ரங்கராஜா வீதியில் கடும் வெயில் தாளாமல் பலர் மயங்கி விழுந்தனர். போலீஸ் கண்டு கொள்ள வில்லை. டோனர் பாஸ் தானே என்றுஅலட்சியமாகப் பேசினர். பணம் கொடுத்து டிக்கட் வாங்கிய பக்தர்கள் கேட்டதற்கு போய் கலெக்டரிடம் கேளுங்கள் என்றனர். பக்தர்கள் பலர் திரும்பிச் சென்று விட்டனர். ஒரு நல்லவர் வீட்டில் போர்டிகோவில் அமர இடம் கொடுத்ததால் அங்கே காத்திருந்து மாலையில் 4 மணிக்கு வரிசையில் நின்று மழையில் நனைந்து கொண்டே சென்று இரவு 11 மணிக்கு தரிசனம் செய்தோம். 1900 டிக்கட் தான்.. ஆனால் 5000 பேர் அதிகப்படியாக வரிசையில் வந்தனர். மிக மோசமான அனுபவம். பொது தரிசனம் நன்றாக உள்ளது. இரவு கீழ் கதிர்பூர் BAV school camp ல் தங்கிவிட்டு காலையில் பாண்டிச்சேரி திரும்பினோம். கேம்பில் எல்லா வசதிகளும் இருந்தன. காவலதிகாரிகளும் திறமையாகவும் கனிவாகவும் செயல்பட்டனர். இனி HRCE ONLINE TKT விற்றால் வாங்கவே கூடாது. பெருமாளை அருகில் தரிசித்தது மட்டும் தான் திருப்தி. இந்த வரிசையில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி வந்தனர்.பெரியவர் சக்கர நாற்காலியில் இருக்க அவர் மனைவி உடன் வந்தார். ஆறாக ஓடிய மழை நீரில் மிகவும் சிரமப்பட்டனர். வெளிநாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்காவது தனிவரிசை அமைத்திருக்கலாம். சினிமாக்காரர்களுக்கும் ரௌடிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது வெட்கக் கேடான செயல்.
Rate this:
Cancel
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
16-ஆக-201917:44:55 IST Report Abuse
K E MUKUNDARAJAN ஜூலை ஒன்று முதலே வி ஐ பீ தரிசனம் கிடையாது என்று சொல்லி எல்லா பண முதலைகளுக்கும் ஒரே நாளில் மற்றவர் வயிற்றெரிச்சல் படாதவாறு பாஸ் கொடுத்து முடித்திருக்க வேண்டும். அன்று பொது மக்கள் அந்த பக்கமே வராதிருந்திருப்பர். வேண்டுமானால் இரு சேவைகளுக்கும் ஒவ்வொரு நாள் ஒதுக்கியிருக்கலாம். மக்களை கோவிலுக்குள் குளத்தை சுற்றி வந்து தரிசிக்க செய்திருந்தால் நிறைய ஜனங்கள் உள்ளிருந்து அழகாக தரிசனம் செய்திருப்பார். வரிசையையும் திருப்பதி போல் அத்தி வரதரை நோக்கி சென்று, பின் பக்கவாட்டில் வெளி செல்வது போல் அமைத்திருந்தால் இன்னும் 20 செகண்ட் சேவை கிடைத்திருக்கும். ஒரு பக்தன் கூட ஏமாந்திருக்க மாட்டான். தமிழ் நாட்டிற்கும் நற்பெயர் உண்டாகியிருக்கும்.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
16-ஆக-201917:39:46 IST Report Abuse
oce அத்தி வரதர் 40ஆண்டுகளுக்கு ஒரு தடவை விழித்து உலகை பார்க்கிறார். விழித்திருக்கும் போது உலகில் நல்ல விஷயங்கள் நடக்கின்றன. உதாரணமாக 1979ல் எம்ஜிஆர் ஆட்சி மக்கள் சுபிட்சம். 2019 ல் எடப்பாடி திரு பழனிசாமி அவர்களது நல்லாட்சி. அத்தி வரதப்பா நீ இருக்க எங்களுக்கு எந்த குறையுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X