சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்!

Added : ஆக 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
உணவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பயன்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு, உலகெங்கும் தடை வர ஆரம்பித்துள்ளது. இதனால், அதே தன்மையுள்ள, ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத தாளை உருவாக்கும் தேடல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தை சேர்ந்த, 'கியுவான்டெக்' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், இறால் போன்ற மீன் வகைகளின் வெளி ஓடுகள் இதற்கு மாற்றாக
இறால் ஓட்டில் இயற்கை பிளாஸ்டிக்!


உணவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல பயன்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்கு, உலகெங்கும் தடை வர ஆரம்பித்துள்ளது. இதனால், அதே தன்மையுள்ள, ஆனால் சுற்றுச்சூழலுக்கு கேடில்லாத தாளை உருவாக்கும் தேடல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தை சேர்ந்த, 'கியுவான்டெக்' என்ற உயிரித் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள், இறால் போன்ற மீன் வகைகளின் வெளி ஓடுகள் இதற்கு மாற்றாக இருக்கும் என, அடித்துச் சொல்கின்றனர்.இறாலின் வெளி ஓடுகள் கழிவாக எறியப்படுகின்றன. அவற்றை நொதிக்க வைத்தால், ஓட்டிலுள்ள, 'சின்டின்' என்ற இயற்கையான உயிரி பாலிமர்களை பிரித்தெடுக்க முடியும்.சற்று கெட்டியான சின்டினை, வேதிவினை மூலம், 'நெகிழும் தன்மையுள்ளதாக மாற்றினால், 'சிடோசான்' என்ற பொருள் கிடைக்கிறது. இதை படலமாக ஆக்கினால், பிளாஸ்டிக் காகிதம் போலவே தெளிவான படலமாக இருக்கிறது.

இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கும் சிடோசான் காகிதம், 90 நாட்களுக்குள் மட்கிவிடும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இப்போதே ஸ்காட்லாந்தின் சூப்பர் மார்க்கெட்டுகள், சிடோசான் காகிதங்களை தங்கள் உணவு பகுதிக்குப் பயன்படுத்த ஆர்வம் காட்டியுள்ளனர். பிளாஸ்டிக் காகிதத்திற்கு வந்து விட்டது ஒரு மாற்று.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-ஆக-201910:39:46 IST Report Abuse
Bhaskaran அப்படியானால் ஐயாறுங்க எல்லோரும் இந்த இறால் தோல் பாக்கெட்டில் நெய் போன்ற பொருட்களை புனிதமாக வாங்கிச்செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லுங்கள்
Rate this:
D. Selestine Arputharaj - Pilavilai, Mondaymarket,இந்தியா
20-ஆக-201910:22:37 IST Report Abuse
D. Selestine Arputharajஏன்டா உன்னோட அரிப்பை உன் வீட்ல வச்சுக்கோ. எதுக்குடா தேவை இல்லாம ஐயர் என்று பேசி சாதி சண்டைக்கு வழி வகுக்கிறிங்க...
Rate this:
abdul rajak - trichy,இந்தியா
21-ஆக-201909:01:28 IST Report Abuse
abdul rajakஆனால் பண்ணுற உள்குத்து இருக்கே அப்பப்பா...
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஆக-201904:08:09 IST Report Abuse
J.V. Iyer இது ஒன்றும் புதிதல்ல. Chitin , chitosan போன்ற பாலிமர் பொருட்கள் ஏற்கனவே உபயோகத்தில் உள்ளன. பார்க்க: s://en.wikipedia.org/wiki/Chitosan
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17-ஆக-201920:05:05 IST Report Abuse
Rangiem N Annamalai அருமையான கண்டுபிடிப்பு என நினைக்கிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X