சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

வாழை விவசாயிக்கு ஒரு செயலி!

Added : ஆக 16, 2019
Share
Advertisement
வாழை விவசாயிக்கு ஒரு செயலி!

மொபைல் செயலி வடிவில், வாழை விவசாயிகளுக்கு உதவ வருகிறது அறிவியல். வாழைக் கன்றையும், குலைகளையும் பூச்சிகள், நோய்கள் தாக்கும், போது, ஆரம்பத்திலேயே கண்டறியவும், அவற்றை பரவாமல் தடுக்கவும் பயோடைவர்சிட்டி இன்டர்நேஷனல் அமைப்பு ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவியோடு இயங்கும் 'டுமாய்னி' (Tumaini) என்ற இச்செயலியை பயன்படுத்தினால், பூச்சிகள் மற்றும் நோய்களைத் தடுப்பதில், 90 சதவீத வெற்றிகிடைப்பதாக, இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.உலகெங்கும், 13 கோடி டன் வாழை விளைவிக்கப்படுகிறது. வாழை, உலகின் உணவுப் பாதுகாப்பில் முக்கிய இடம் வகிப்பதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது.அதே சமயம், திடீர் நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகும் பயிராகவும் வாழை இருக்கிறது.

டுமாய்னி செயலியை ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்த பிறகு, வாழையின் நோய் தாக்கிய பகுதியை படம் பிடித்தால், உடனே அது என்ன நோய் அல்லது எந்த பூச்சி வகை தாக்கியது என்பதை செயலி காட்டிக் கொடுத்துவிடும்.அதுமட்டுமல்ல, விவசாயி என்ன செய்யவேண்டும் என்பதற்கு, இரண்டு மூன்று வழிகளையும் பரிந்துரைக்கும்.கம்ப்யூட்டர் விஷன் என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும், 20 ஆயிரம் வாழை நோய் புகைப்படங்களையும் அடிப்படையாக வைத்து, டுமாய்னி செயலி இயங்குகிறது.இணைய வசதி இல்லாவிட்டாலும், இந்த செயலி படங்களை அலசி பரிந்துரைகளை வழங்கும். இப்போது பரிசோதனை நிலையில் இருக்கும் இந்த செயலி நடைமுறைக்கு வந்தால், வாழை விவசாயிகளின் பாரம் குறையும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X