பிரதமர் உரை: வரவேற்ற சிதம்பரம்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (43)
Advertisement

புதுடில்லி : பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.





நாட்டின் 73 வது சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி, குடும்பக் கட்டுப்பாடு, ஒருமுறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் ஒழிப்பு, நாட்டின் செல்வ வளங்களை உருவாக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை ஆகிய முக்கியமான 3 அறிவிப்புக்களை வெளியிட்டார். இந்த அறிவிப்புக்களுக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். பொதுவாக பிரதமர் மோடி கூறும் ஒன்வொன்றையும் கடுமையாக விமர்சிக்கும் ப.சிதம்பரம் தற்போது வரவேற்றுள்ளார்.




இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம்பெற்ற 3 அறிவிப்புக்களை நாம் வரவேற்க வேண்டும். அளவான குடும்பம் தேசிய கடமை, தொழிலாளர்களுக்கு மரியாதை, பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவை வரவேற்கப்பட வேண்டியது. பிரதமரின் 3 அறிவுரைகளில் 2வதாக சத்தமாகவும், தெளிவாகவும் வெளியிட்டுள்ள அறிவிப்பை நிதியமைச்சரும், அவரின் வரித்துறை அதிகாரிகளும், புலனாய்வு அமைப்பினரும் கேட்பாளர்கள் என நம்புகிறேன்.





முதல் மற்றும் 3வது அறிவிப்புக்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். உள்ளூர் அளவிலேயே நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்ளும் முன் தாங்கள் செய்வது அந்த குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்லதா என்பதை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். அளவான குடும்பம் அமைத்து அதன் மூலம் நாட்டுப்பற்றை நாட்டிற்கு உணர்த்த வேண்டும். அவர்களிடம் இருந்து மற்றவர்களும் கற்ற வேண்டும். சமூக விழிப்புணர்விற்கு இது அவசியம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
17-ஆக-201911:43:25 IST Report Abuse
bal இப்போது பிஜேபியில் நிதி அமைச்சர் வேளைக்கு ஆள் தேவை....அதுதான் தூபம்
Rate this:
Share this comment
Cancel
Ganesan.N - JAMSHEDPUR,இந்தியா
16-ஆக-201922:58:12 IST Report Abuse
Ganesan.N திரு.சிதம்பரம் தன் மற்றும் தன் மகன் மேல் உள்ள வழக்குகளுக்காக பயப்படுவது போல் தோன்றுகிறது. இத்தனை நாள் வரை மோடியின் ஒரு அறிவிப்பையும் வரவேற்காதவர் இப்போது பாராட்டுவதில் ஏதோ உள் அர்த்தம் இருப்பதாக தோன்றுகிறது.
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
16-ஆக-201921:12:27 IST Report Abuse
thulakol இதில் எதோ சூட்சுமம் உள்ளது புறம் பேசும் ஆள் ஆயிற்றே இவர்
Rate this:
Share this comment
Ramakrishnan Natesan - MICHIGAN, TROY,யூ.எஸ்.ஏ
16-ஆக-201923:58:45 IST Report Abuse
Ramakrishnan Natesanகண்டிப்பா பாம்பின் கால் பாம்பறியும் கரெக்டா கண்டு பிடித்துவிட்டேரே சபாஷ்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X