ஜாகிர் நாயக்கிடம் விசாரணை: மலேஷியா முடிவு

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement
Malaysia, Islamic preacher, Zakir Naik, religion, ஜாகிர் நாயக், விசாரணை, மலேஷியா,

கோலாலம்பூர்: இன ரீதியாக கருத்து தெரிவித்த சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கிடம் விசாரணை நடத்த மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.

மும்பையை சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக், பல நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்று சொத்து வாங்கியதாகவும், பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது தொடர்பாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். இதனால், அவர் இந்தியா வராமல், மலேஷியாவில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த மலேஷிய அரசும் மறுத்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் கூட்டம் ஒன்றில் ஜாகிர் நாயக் பேசும்போது, இந்தியாவில், வசிக்கும் சிறுபான்மையினரான முஸ்லிம்களை விட மலேஷியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு 100 மடங்கு அதிக உரிமைகள் உள்ளதாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேஷிய அமைச்சர்கள் வலியுறுத்தினர்.


latest tamil newsஇதனை தொடர்ந்து, மலேஷிய உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசின் வெளியிட்ட அறிக்கையில், பொது அமைதியை கெடுக்கும் வகையில், இன ரீதியாக கருத்து தெரிவித்ததற்காகவும், பொய் தகவல்களை பரப்பியதற்காகவும் ஜாகிர் நாயக் மற்றும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்துவார்கள். அனைத்து தரப்பினருக்கும், குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன், சமூக நல்லிணக்கம் அமைதி ஆகியவற்றிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் யார் மீதும்,எனது அமைச்சகத்தின் கீழ் வரும் விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க தயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன் எனக்கூறியுள்ளார்.


latest tamil news
இது தொடர்பாக ஜாகிர் நாயக் தரப்பினர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், நாங்கள் முதலில் அமைச்சரின் முழு அறிக்கையை படித்த பின்பே கருத்து தெரிவிக்க முடியும் எனக்கூறியுள்ளார்.

மலேஷியாவில் மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள். மற்றவர்கள் சீனர்கள் மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்தியாவை சேர்ந்தவர்களின் பெரும்பான்மையினர் ஹிந்து மதத்தை சேர்த்தவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
19-ஆக-201911:57:22 IST Report Abuse
ganapati sb இந்த அந்நிய மதவெறி ஜாகிர் இந்தியாவில் வந்து வழக்கை சந்திக்க வேண்டும்
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
16-ஆக-201921:55:59 IST Report Abuse
S.Ganesan பார்த்து. பிரம்பை எடுத்து பின்னிட போறாங்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஆக-201921:45:33 IST Report Abuse
Ramesh Sargam Than vinai thannai sudum, ottappam veetai sudum. One's deed will burn him, pan cake with evil intention will burn the house.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X