ஐ.நா., ஆலோசனை : பாக்., ஆர்வம்

Updated : ஆக 16, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement

வாஷிங்டன் : சீனாவின் வலியுறுத்தல் காரணமாக, காஷ்மீர் விவகாரம் குறித்து ரகசிய ஆலோசனை நடத்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் முன் வந்துள்ளது.latest tamil newsஇன்று இரவு (ஆக.,16) நடக்க உள்ள ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனையால் பாகிஸ்தான் உற்சாகத்தில் உள்ளது. அதே சமயம் இந்தியா பெரிய அளவில் ஆர்வமோ, பதற்றமோ கொள்ளவில்லை. ஏனெனில் சீன கேட்டுள்ள இந்த ரகசிய ஆலோசனை பற்றி பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் இந்த கூட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ, தீர்மானமோ, எந்த நாடும் ஆதரவு அளித்ததாகவோ எந்த குறிப்பும் இல்லை.


latest tamil news
இந்த கூட்டத்தால் பாக்., உற்சாகம் அடைந்திருந்தாலும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் கூட இதில் ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது. "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் மனிதாபிமானமற்ற ஒருதலைபட்சமான முடிவு பற்றி முடிவு செய்துள்ளது. காஷ்மீருக்காக தொடர்ந்து நாங்கள் குரல் கொடுப்போம்" என பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி டுவீட் செய்துள்ளார்.


latest tamil news
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா மறுத்தது. தற்போது அமெரிக்காவையும் இந்த விஷயத்தில் தலையிட வைக்க பாக்., தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஆப்கன் எல்லையில் உள்ள பாக்., படைகளை திரும்பப் பெற்று, இந்திய எல்லையில் குவித்து, இந்தியாவிற்கு அச்சுறுத்தல் அளிக்க தயாராக உள்ளதாகவும் அமெரிக்காவிற்கு நிபந்தனையும் விதித்திருப்பது கூறப்படுகிறது.


latest tamil news
ஆனால் இது பற்றி பாக்.,ல் உள்ள இந்திய தூதர்கள் கூறுகையில், இது உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் என இஸ்லாமாபாத் நினைக்கிறது. ஆனால் உண்மையில் இதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என்பதே உண்மை நிலவரம். பாக்.,கின் அழுத்தம் காரணமாக சீனா இதனை முன்னெடுத்ததாலேயே இந்த கூட்டத்திற்கு ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஐ.நா.,வுக்கு கூட இதில் ஆர்வமில்லை என்பது அதன் தலைவரின் நடவடிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

அமெரிக்காவும் இது பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதை கூட தவிர்க்கிறது. "இது இந்தியாவுக்கு எதிராக பாக்., எடுக்க நினைக்கும் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இது போன்ற நடவடிக்கைகள் அவசியம். காஷ்மீரில் மனிதஉரிமை உறுதி செய்யப்படும் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்" என்ற மட்டுமே அமெரிக்க நிர்வாகிகளும், எம்.பி.,க்களும் கருதுகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
17-ஆக-201910:20:01 IST Report Abuse
Yes your honor பாக்கிஸ்தான் நினைப்பதைப் போல உலக நாடுகள் எளிதில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்காது. பாக்கிஸ்தான் தீவிரவாதிகளால் பல நாடுகள் பலவகை இன்னல்களை சந்தித்துள்ளன. அமெரிக்க இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்த பின் லேடன் இதே பாக்கிஸ்தானில் மாப்பிள்ளை போல் வாழ்ந்து வந்துள்ளான். மேலும், முக்கியமாக அமெரிக்க செனட் சபையாகட்டும் அல்லது உறுப்பினர்களாகட்டும் பலபேர் இந்தியாவிற்கு ஆதரவாகவே உள்ளனர், இருப்பார்கள். அமெரிக்க தேர்தலும் நெருங்கி வருவதால் டிரம்ப் கூட இந்தியாவிற்கு எதிராக செயல்படத் தயங்குவார். சீனா, பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இதில் சிறிதளவு விருப்பம் காட்ட முக்கிய காரணம் லடாக் பகுதியாகக் கூட இருக்கலாம். பாக்கிஸ்தானின் பகுதியாக இப்பொழுதுள்ள பலுசிஸ்தான் மக்கள் கூட, பாக்கிஸ்தானால் இப்பொழுதுள்ள இந்திய அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டுவிட்டதால் தான் எங்களின் சுதந்திரத்தைப் பற்றி பேசுங்கள் என இந்தியாவைப் பார்த்து இறைஞ்சுகிறார்கள். இந்தியா தயங்காமல், இது எங்கள் உள்னாட்டு விவகாரம், பிற நாடுகளின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என மீண்டும் மீண்டும் சில முறை தெளிவுபடுத்தினால் மற்ற நாடுகள் சைலன்ட்டாக ஒதுங்கிவிடும் என்பதே உண்மை. இவ்வருடத்திற்கான நம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 காஷ்மீரின் 370 சட்ட நீக்கத்திற்குப் பிறகே வந்துள்ளது. முஸ்லிம் மதத்தைச் சார்ந்த அரபு நாடுகள் கூட சிறிதும் எதிர்ப்போ தயக்கமோ இன்றி தங்களது பூஜ் கலீஃபா கட்டிடத்தை மூவர்ணங்களால் அலங்கரித்து இந்திய சுதந்திர தினத்தை கௌரவித்துள்ளன. ஆனாலும் பாக்கிஸ்தான் தன் வாலை ஆட்டும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கும். இது எனக்கு கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனில், 'அந்த செவுரில் என் அப்பா படம் வரைய வேண்டும்' என்று வில்லன் புலம்பிக் கொண்டே செல்வதையே நிணைவுபடுத்துகிறது.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
16-ஆக-201920:13:52 IST Report Abuse
Murugan இதையெல்லாம் யோசிக்கமாலேவா மோடி இவ்வளவு பெரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வந்திருப்பார்? லண்டனில் இந்தியர்கள் மேல் நடந்த தாக்குதல் அவர்களின் பயத்தையும், தீவிரவாத குணத்தையும் உறுதி படுத்துகிறது …...
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
16-ஆக-201920:13:23 IST Report Abuse
M.COM.N.K.K. ஐநாவை நாங்கள் கேட்டுக்கொவது என்னவென்றால் பாகிஸ்தானும் சீனாவும் காஷ்மீரின் நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கீறார்கள் உடனே அதை திருப்பி இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும். தற்போது சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளார்கள் அதை நாம் தவுடுபொடியாக்க வேண்டும். இந்த இரண்டு நாடும் காஷ்மீரை பங்குபோட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. சீனாவின் குள்ளநரி வேலையை உடனே வேரறுக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X