பொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை| Dinamalar

பொருளாதார மந்த நிலையை சீரமைக்க நிதியமைச்சருடன் பிரதமர் ஆலோசனை

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (50)
Share
பொருளாதார, மந்த நிலையை ,சீரமைக்க,நிதியமைச்சருடன் பிரதமர் ,ஆலோசனை

புதுடில்லி:பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது குறித்து, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமனுடன் ஆலோசனை நடத்திய, பிரதமர் மோடி, அதை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து, அறிவுரை வழங்கினார்.

நேற்று முன்தினம், நாட்டின், 73வது சுதந்திர தின உரையை, டில்லி செங்கோட்டையில் ஆற்றிய, பிரதமர் மோடி, மதியத்திற்குப் பின், நிதியமைச்சகம் சென்றார். அங்கு, நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து, நிதித்துறை வட்டாரங்கள் கூறுவதாவது:கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ௬.௮ சதவீதமாக இருந்தது. இது, ௨௦௧௪ - ௧௫ம் ஆண்டிற்குப் பின், மிகக் குறைவாகும். நுகர்வோர் தேவைகள் அதிகம் இருந்த போதிலும், அவர்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வீழ்ச்சிஅன்னிய நேரடி முதலீடு வீழ்ச்சி அடைந்துள்ளது; சர்வதேச வர்த்தகமும் குறைந்துள்ளது; பணத்தின் மதிப்பு, நாளுக்கு நாள் வீழ்ந்து வருகிறது.

பொருளாதார சீர்குலைவிலிருந்து நாட்டை காக்கும் வழிமுறைகளை ஆராயாமல், நிதியமைச்சகம் மவுனம் காத்து வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னர், சக்தி காந்ததாஸ், சமீபத்தில் இது குறித்து கூறும் போது, 'தனிப்பட்ட காரணங்களுக்காகத் தான், பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சிலர். இது, வழக்கமான ஒன்று தான்; பொருளாதாரம் விரைவில் சீரடையும்' என்றார்.

எனினும், அதற்கான வாய்ப்புகளை காணவில்லை. மந்தநிலை மேலும் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில், ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்படைந்துள்ளது; பல ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.ரியல் எஸ்டேட் துறையும், மிகவும் பாதிப்பு அடைந்துள்ளது. லட்சக்கணக்கான வீடுகள், கட்டி முடிக்கப்படாமல், பணம் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. இதில், பல லட்சம் கோடி ரூபாய் முடங்கியுள்ளது.

எனினும், தொழில்களுக்கு வங்கி கடனுதவி, 2018 ஏப்ரல் - ஜூன் காலாண்டில், 6.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 0.9 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையும், நலிவடைந்துள்ளது.


எதிர்பார்ப்புசிறு தொழில் துறை, 2018ம் நிதியாண்டின், முதல் காலாண்டில், 0.7 சதவீதத்திலிருந்து, 0.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்து உள்ளது.பொருளாதாரத்தை பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து, பிரதமர் ஆலோசனை நடத்தினார்; அதை சரி செய்வதற்கான முடிவுகளும் எடுக்கப் பட்டன. இதையடுத்து, ஒவ்வொரு துறையாக, சீர்திருத்தம் மேற்கொள்ள, விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X