காஷ்மீர் விவகாரத்தில் தாக்கலான மனுக்கள் மீது அதிருப்தி!

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
காஷ்மீர், விவகாரம், மனுக்கள்,  அதிருப்தி,உச்ச நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை, நேற்று விசாரித்த நீதிபதிகள், அதற்கான மனுக்கள், சரியானபடி தாக்கல்செய்யப்படவில்லை என, அதிருப்தி தெரிவித்தனர்.

அரசியல் சட்டத்தின், 370 வது பிரிவின் கீழ், ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 5ம் தேதி முதல் ரத்துசெய்யப்பட்டுள்ளது.அதை எதிர்த்து, வழக்கறிஞர், எம்.எல்.சர்மா என்பவர் உட்பட, ஆறு பேர், உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்து, மத்திய அரசின் உத்தரவை, தடை செய்ய கோரிஇருந்தனர்.


விசாரணை



அந்த மனுக்கள் மீது, தலைமை நீதிபதி, ரஞ்சன்கோகோய் தலைமையில், நீதிபதிகள், பாப்டே மற்றும் எஸ்.ஏ. நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை மேற்கொண்டது.அப்போது, அந்த மனுக்கள், தவறுகளுடனும், முறையான விதத்திலும் தாக்கல் செய்யப்பட வில்லை என்பதை நீதிபதிகள் கண்டறிந்தனர்.

இது குறித்து, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதாவது:வழக்கறிஞர், எம்.எல். சர்மாவின் மனுவை, ௩௦ நிமிடங்கள் படித்துப் பார்த்தும், அவர் என்ன கோருகிறார் என்பது தெரியவில்லை.ஏராளமான தவறுகளுடனும், அரை குறை தகவல்களுடனும், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவை தடுத்து நிறுத்த கோரும் மனுக்கள், இவ்வாறு தாக்கல் செய்யப் பட்டது சரியல்ல.


ஒத்திவைப்பு



எனவே, தவறுகளை சரி செய்து, புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யுங்கள். முக்கியமான, அயோத்தி விவகாரத்தை, நீதிபதிகள் விசாரித்துக் கொண்டு இருக்கின்றனர்.அந்த வேலையில் இருந்து நீதிபதிகளை பிரித்து, இந்த விவகாரத்தை விசாரிக்க வைத்துள்ளேன். எனினும், மனுக்கள் சரியாக இல்லாதது, வேதனை அளிக்கிறது.இவ்வாறு, அவர் குறிப்பிட்டார்.

மனுதாரர்களில் ஒருவரான, ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும், வழக்கறிஞர், ஷகில் ஷபீர் என்பவர், ''தவறுகளை சரி செய்து, புதிதாக மனு தாக்கல் செய்துள்ளேன்,'' என்றார். எனினும், அதை உடனடியாக விசாரிக்க, நீதிபதிகள் மறுத்து, வழக்கை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். ஜம்மு - காஷ்மீரின், தேசிய மாநாட்டுக் கட்சி, எம்.பி.,க்கள் இருவரும், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, மனு தாக்கல்செய்திருந்தனர்.


சற்று பொறுத்திருங்கள்!



ஜம்மு - காஷ்மீரில், செய்தி ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை விலக்கக் கோரி, 'காஷ்மீர் டைம்ஸ்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், 'அங்கு இப்போது தான் நிலைமை சற்று சீரடைந்து வருகிறது. ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இன்று காலையில், 'லேண்ட்லைன்' போனில் தொடர்பு கொண்டு, இப்போது தான், போன் இணைப்புகள் வேலை பார்க்கின்றன என்றார். சற்று பொறுத்திருங்கள்' எனக் கூறி, வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayappan - chennai,இந்தியா
17-ஆக-201917:57:45 IST Report Abuse
Ayappan Vadivelu Eli movie -bank robary comedy
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஆக-201917:46:04 IST Report Abuse
Malick Raja நாட்டாண்மை தீர்ப்புதான் .. ஒரே அடி அணைத்து வழக்குகளும் தள்ளுபடி என்று உடனே சொன்னால் அது நீதிமன்ற அளவீடாக இருக்காது எனவே அடுத்த விசாரணை தேதியில் நல்லதீர்ப்பாக அதாவது அணைத்து வழக்குகளும் தள்ளுபடி என்பதே சரியாக இருக்கலாம்
Rate this:
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
17-ஆக-201917:40:06 IST Report Abuse
DSM .S/o PLM பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோடு, ஜனாதிபதியின் ஒப்புதலோடு சட்ட திருத்தம் செய்யப்பட்ட பிறகு நீதிமன்றம் என்ன செய்ய முடியும் ? அதையும் அரசு அவசர சட்டம் கொண்டு வந்து நிராகரித்தால் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X