ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் தணிந்து இயல்பு நிலை திரும்புகிறது!

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

ஸ்ரீநகர்:கடந்த, 12 நாட்களாக இயல்பு வாழ்க்கை முடங்கிய, ஜம்மு - காஷ்மீரின், காஷ்மீர் பகுதியில், அமைதி திரும்புகிறது. பதற்றம் அறவே தணிந்துள்ளதால், இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப முன் வந்துள்ளனர். அரசு அலுவலகங்கள், நேற்று வழக்கம் போல இயங்கின. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை, திங்கள் கிழமை முதல், திறக்க முடிவு செய்யப்பட்டுஉள்ளது. தடை செய்யப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புகள், மீண்டும் செயல்பட துவங்கியுள்ளன.latest tamil newsஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 5 ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மாநிலம், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப் பட்டது. இதையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


latest tamil news

துண்டிப்புசாதாரண போன்கள், மொபைல் போன்கள், இணையதள தொடர்பு, கேபிள், 'டிவி' சேவைகள் துண்டிக்கப்பட்டன. பிரிவினைவாதம் பேசிய அரசியல் தலைவர்கள், கைது செய்யப்பட்டனர்; சிலர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதனால், காஷ்மீரில், சிற்சில கல்வீச்சு சம்பவங்கள் தவிர்த்து, பெரிய அளவிலான எதிர்ப்புகள் எதுவும், கடந்த, 12 நாட்களாக இல்லை.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.சாலைகளிலும், தெருக்களிலும், பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்த போதிலும், முஸ்லிம்களின் நேற்றைய, வெள்ளிக்கிழமை தொழுகை, அநேக இடங்களில் அமைதியான முறையிலேயே நடந்தது.'அரசு ஊழியர்கள், அவரவர் பணியிடங்களுக்கு, வெள்ளிக்கிழமை முதல் சென்று, பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, கடந்த சில நாட்களாக, 'ரேடியோ' மூலம் அரசு அறிவிப்பு செய்தது. அதை ஏற்று, பெரும்பாலான அரசு ஊழியர்கள், பணிக்கு திரும்பினர்; அரசு அலுவலகங்களில், இயல்பான நிலைமை காணப்பட்டது.


வாய்ப்புமாநிலத்தில் இயல்பு நிலை தொடர வேண்டும் என, பெரும்பாலான மக்கள் விரும்புவதால், பள்ளிகளை திறக்கவும், துண்டிக்கப்பட்ட போன் இணைப்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும், அரசு முடிவு செய்துள்ளது.

'லேண்ட்லைன் போன்' எனப்படும், சாதாரண போன் இணைப்புகள், நேற்று காலையில் இருந்து மீண்டும் செயல்பட துவங்கின; நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், மாநில அரசின் உயரதிகாரிகளின் போன்கள் செயல்பட துவங்கின. இன்று முதல், படிப்படியாக அனைவருக்கும் இணைப்புகள் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, பள்ளிகளும், திங்கள் கிழமை முதல் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்துள்ள,இப்பகுதி பிராமணர்களான, 'பண்டிட்'கள் அனைவரும், சொந்த இடங்களுக்கு திரும்புவது, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவால் தான் நடக்கும். பண்டிட்டுகளை, காஷ்மீரில் மீண்டும் குடியமர்த்த வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது; அதற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளது.இடம்பெயர்ந்த பண்டிட்டுகளுக்கான, வேலைவாய்ப்பு அறிவிப்பு, விரைவில் வெளியாகும்; 3,000 பேர் வேலைக்கு அமர்த்தப்படுவர்.

பரூக் கான், ஜம்மு - காஷ்மீர் கவர்னரின் ஆலோசகர்


இயல்பு வாழ்க்கை திரும்பும்ஜம்மு - காஷ்மீர், தலைமை செயலர், பி.வி.ஆர்.சுப்ரமணியம், நிருபர்களிடம் நேற்று கூறிய தாவது:கடந்த, 5ம் தேதி, சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்ட நாளில் இருந்து, இதுவரை, வன்முறையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை; பெரிய அளவிலான காயங்களும் யாருக்கும் ஏற்படவில்லை. எனவே, வரும் நாட்களில், படிப்படியாக நிபந்தனைகள் தளர்த்தப்படும்; கெடுபிடிகள் நீக்கப்படும்; மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்யப்படும்.

அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.குழந்தைகளின் கல்வி பாதிக்கப் படக் கூடாது என்பதற்காக, பள்ளி, கல்லுாரிகள், படிப்படியாக திறக்கப்படும். தொலைத் தொடர்பு துண்டிப்பு தான் பெரிய கவலையாக இருந்தது. அதுவும், படிப்படியாக வழங்கப்படும். இணைப்புகள் மீண்டும் வழங்கும் பணி, நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.நேற்றைய நிலவரப்படி, மொத்தமுள்ள, 24 மாவட்டங்களில், 12மாவட்டங்களில், இயல்பு நிலை நிலவுகிறது. அரசு போக்குவரத்து சேவை, மீண்டும் தொடரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


பயங்கரவாதிகள் சதித்திட்டம்காஷ்மீர் அமைதியை சீர்குலைக்க, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டதால், பெரிய அளவில் கலவரம் வெடிக்கும் என, எதிர்பார்த்த பயங்கரவாதிகள் ஏமாற்றம் அடையும் வகையில், அங்கு அமைதியான சூழ்நிலை நிலவுகிறது.

இதை சீர்குலைக்க, மிகப் பெரிய தாக்குதலை நடத்த, பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளதாக, நம்பத்தகுந்த உளவு தகவல்கள், மத்திய அரசுக்கு கிடைத்து உள்ளன.இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் உள்ள, ராணுவம், விமானப்படை மற்றும் துணை ராணுவப்படையினர், முழு உஷாராக இருக்குமாறு, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஆக-201915:39:51 IST Report Abuse
Endrum Indian அய்யயோ அக்கிரமம் அநியாயம் இது மாதிரி ஒருக்காலும் நடக்க முஸ்லீம் நேரு காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது
Rate this:
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
17-ஆக-201913:47:16 IST Report Abuse
Ganesan ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்த பிரச்சனை விவாதிக்கப்பட்டுள்ளதால், காஷ்மீர் பிரச்சனை இனிமேலும் உள்நாட்டு விவகாரம் அல்ல, சர்வதேச விவகாரம் ஆகியுள்ளது
Rate this:
sankar - Nellai,இந்தியா
17-ஆக-201917:00:28 IST Report Abuse
sankarஇந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசும் உம்மீது நான் வழக்கு போடலாமா...
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
17-ஆக-201913:28:27 IST Report Abuse
Rajan ஹே விடுங்கப்பா பெயரில்லாத பய ஆப்பு கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X