அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜாதி ஒழிய கயிறு ஒழியணும் :அமைச்சர், ஜெயகுமார்

Added : ஆக 16, 2019 | கருத்துகள் (24)
Advertisement
 ஜாதி ஒழிய கயிறு ஒழியணும் :அமைச்சர், ஜெயகுமார்

சென்னை, ''ஜாதி வேற்றுமைகளை ஒழிக்கவே, மாணவர்கள் கையில் கயிறு கட்டக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.சென்னை, ராயபுரத்தில் உள்ள, புனித அன்னாள் பள்ளி விளையாட்டு விழாவில், நேற்று காலை, அமைச்சர், ஜெயகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாணவர்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்து, ஆலோசனைகள் வழங்கினார்.பின், நிருபர்களிடம், அவர் கூறியதாவது:மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, தமிழகத்திற்கு தேவையில்லை என்பது, அ.தி.மு.க., வின் நிலைப்பாடு. கடந்த, 2010ல், மத்தியில் இருந்த, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அரசு, 'நீட்' தேர்வை கொண்டுவர எடுத்த முயற்சியால் தான், இந்த பிரச்னை நிகழ்ந்தது.பொய் சொல்லி வாழ்ந்தவன் இல்லை; மெய் சொல்லும் நாங்கள் கெட்டு போவதும்இல்லை. 'நீட்' தேர்வு விலக்கு மசோதாவிற்கு, மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததற்கான காரணத்தை அறிந்த பின், இவ்விவகாரத்தில், தமிழக அரசு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்.பள்ளிகளில், ஜாதி வேற்றுமையை ஒழிக்கவே, மாணவர்கள், கையில் கயிறு கட்டக் கூடாது என, அரசு அறிவுறுத்தியது.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
17-ஆக-201917:38:37 IST Report Abuse
spr தாலி கூட ஒரு (மஞ்சள்) கயிறுதான் அறுத்துடலாம்? அப்புறம் தாலியில் கட்டக்கூட தங்கம் வாங்கமுடியவில்லை என்று சொல்ல வாய்ப்பில்லை பதவி, பணம் செல்வாக்கு, புகழ் என அலையும் அரசியல்வியாதி, கலைத்துறை மற்றும் வியாபாரம் இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஜாதி மதம் மற்றும் மானம் அவமானம் என்ற பாகுபாடுகள் எதுவுமே இல்லை. கலைத்துறையினருக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கூட இல்லை ஏனெனில் இவர்கள் அனைவரும் தங்கள் சுயநலத்திற்காக எல்லோரையும் சார்ந்திருக்க வேண்டும் இன்று இவர் பேசிய இடத்தில், அவரவர் கழுத்தில் கட்டப்பட்டுள்ள சிலுவை கூட கயிற்றிலேதான் தொங்குகிறது காசில்லாதவன் இடுப்பில் அவன் மானத்தை மறைக்க கட்டப்படும் கோவணம் கூட அரைநாண் கயிற்றில்தான். அதையும் அறுத்துடலாமா?
Rate this:
Share this comment
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
17-ஆக-201916:50:19 IST Report Abuse
amuthan தோள் கயிற்றை மட்டும் கழட்டினால் போதும்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஆக-201915:53:05 IST Report Abuse
Endrum Indian அப்போ கழுத்தில் சிலுவை, தலையில் தொப்பி, முகத்தில் குறுந் தாடி, உடலில் புர்கா இதையும் ஒழியணும் என்று பொருள் எடுத்துக்கொள்ளலாமில்லே இப்போ??? என்ன ஜெயகுமார் சரி தானே நான் சொல்வது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X