பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரிக்கு ரூ.1000 கோடி முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (29)
Share
Advertisement

சென்னை:'நீலகிரி மாவட்டத்தை, பேரிடர் பாதித்த மாவட்ட மாக அறிவிக்க வேண்டும்' என, முதல்வர், இ.பி.எஸ்., சுக்கு, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.latest tamil news
அதில், அவர் கூறியிருப்பதாவது:நீலகிரி மாவட்டம், கன மழையால் நிலைகுலைந்து உள்ளது. மக்கள் அனுபவிக்கும் துயரத்தை கண்டு, வேதனை அடைந்தேன். துன்பத்தில் வாடும் மக்களை பார்த்து, ஆறுதல் கூறுவது, எதிர்க்கட்சி தலைவரின் கடமை. இதைதவிர, விளம்பர நோக்கம் இல்லை.கருணாநிதி, முதல்வராக இருந்த போது, நீலகிரி மாவட்டத்தில், 'நீர்வழி சாலைகள்' அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டது. அதை நிறைவேற்றி இருந்தால், மண் சரிவுகளை பெருமளவிற்கு தடுத்து இருக்க முடியும்.

கன மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்ததும், உரிய முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துஇருந்தால், பாதிப்புகளை குறைத்திருக்க முடியும்.மாவட்டத்தின் மறு சீரமைப்பு பணிகளுக்கு, 199 கோடி ரூபாய் என, அரசு மதிப்பீடு செய்திருப்பது போதுமானதல்ல. சாலை உட்கட்டமைப்பை சீரமைக்கவும், மண் சரிவுகளால் வீடுகளை இழந்து தவிப்போருக்கு, புதிய வீடுகள் கட்டி கொடுக்கவும், முதல் கட்டமாக, 1,000 கோடி ரூபாய் தேவை.நீலகிரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு, வேலை வழங்க வேண்டும். எதிர்காலத்தில், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல்இருக்க, வல்லுனர் குழு அமைத்து, சிறப்பு திட்டம் உருவாக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
17-ஆக-201922:56:16 IST Report Abuse
Tamilselvan வீராணம் திட்டத்தில் ஆட்டை போட்டது போல ஆட்டை போடலாம் ஏன் திட்டம் திடீர். நீங்கள் பதவியில் இருந்த போது உங்கள் லட்சணம் தெரியாதா ? தமிழ்நாடே இருளில் மூஒல்கி இருந்தது .தினமும் 18 மணி நேரம் மின் வெட்டு தொட்டது எல்லாம் கொள்ளை ஸ்பெக்ட்ரம், நில அபகரிப்பு தொலைபேசி இணைப்பு ஊழல் எங்கும் ஊழல் எதிலும் ஊழல்..நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி ராகுல் மூலம் கிடைத்தது . என்ன குட்டிக்கரணம் போட்டாலும் சுடலையிடம் மீண்டும் மீண்டும் மக்கள் ஏமாற தயராக இல்லை .
Rate this:
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-201922:33:34 IST Report Abuse
ManiS Sodala it is more than 50 percentage. please note, It should be approved by central. I think you thought that Congress is in power.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஆக-201921:44:27 IST Report Abuse
Pugazh V ஸ்டாலின் எதிரிகளுக்கான செய்தி. இங்கே ஸ்டாலினை எதிர்த்து கருத்து எழுதியிருப்பவர்கள், நீலகிரி மக்களுக்கு எதிரானவர்களா? நீலகிரி மக்களுக்கு நிவாரணம் தரக்கூடாதா? அறிவற்ற வாசகக் கூட்டம். ஸ்டாலின் பற்றி என்ன செய்தி வந்தாலும் எதிர்த்து எழுதும் கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X