தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்

Added : ஆக 16, 2019
Share
Advertisement
தார், எக்ஸ்பிரஸ், ரயில், சேவை, நிறுத்தம்

புதுடில்லி: பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட, ஜம்மு - காஷ்மீர் மறுவரையறை சட்டம் - 2019 மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள், அக்டோபர், 31ல் உதயமாகிறது.
நேற்று சர்வதேச எல்லையில் பாக். போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய தாக்குதலில் 3 பாக். ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த பாக். இந்திய துணை தூதரை அழைத்து கண்டித்தது.


latest tamil news




'தார் எக்ஸ்பிரஸ்' நிறுத்தம்:

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே, பல ஆண்டுகளாக இயங்கி வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில், பாகிஸ்தான் எல்லையான வாகாவில், நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, பாக் எல்லை வழியாக கராச்சி நகருக்கும் இடையே இயக்கப்படும், 'தார் எக்ஸ்பிரஸ்' ரயில் சேவையும் நிறுத்தப் பட்டுள்ளதாக, பாக்., கடந்த 9-ம் தேதி அறிவித்துள்ளதையடுத்து, இந்தியாவும் தார் ரயில் சேவையை நிறுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X