பாக்.கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100 -ஐ தொட்டது | Diesel price approaches Rs100 mark | Dinamalar

பாக்.கில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100 -ஐ தொட்டது

Added : மே 02, 2011 | கருத்துகள் (4) | |
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலியப்பொருட்களின் விலை தாறுமாறாக எகிறியதைத்தொடர்ந்து டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100 ஐ எட்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே போவதால் இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயரத்துவது வழக்கமான ஒன்றாக உளளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகபட்சமாக ரூ. 2 வரை உயரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோலியப்பொருட்களின் விலை தாறுமாறாக எகிறியதைத்தொடர்ந்து டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 100 ஐ எட்டியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து கொண்டே போவதால் இந்தியாவில் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயரத்துவது வழக்கமான ஒன்றாக உளளது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகபட்சமாக ரூ. 2 வரை உயரத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே போன்று பாகிஸ்தானில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ. 100 வரை எகிறியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை ஆணையத்தின் செய்தி ‌தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலைகடந்த மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் பீப்பாய் ஒன்று ரூ. 117 வரை உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோலியப் பொருட்களில் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு்ள்ளது. மேலும் பொது விற்பனை வரியின் கீழ் பெட்ரோலிப்பொருட்கள் வருவதால் அதி விரைவு டீசல் விலை லிட்டர் ஒன்றுக்குரூ. 99.92 பைசாவிற்கும், அதிவிரைவு பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 88.41-க்கும், கெரசின் விலை லிட்டருக்கு 89.70-ககும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானப்போக்குவரத்து பயன்பாட்டிற்காக எரிபொருள் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X