பொது செய்தி

தமிழ்நாடு

கோடி பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 16, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த வைபவத்தில் ஒரு கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்றிரவு அத்தி வரதரை அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்ய உள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் விதவிமான பூ மற்றும் பட்டு ஆடைகளில் ராஜ அலங்காரத்தோடு அத்தி

காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவம் நேற்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த வைபவத்தில் ஒரு கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்றிரவு அத்தி வரதரை அனந்த சரஸ் குளத்தில் ஸ்தாபனம் செய்ய உள்ளனர்.latest tamil news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ல் துவங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் விதவிமான பூ மற்றும் பட்டு ஆடைகளில் ராஜ அலங்காரத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்தார். நேற்று ரோஜா நிற பட்டாடையில் எழுந்தருளினார்.


latest tamil news

அத்தி வரதர் வைக்கப்படவுள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அனந்தசரஸ் குளம்.

அத்தி வரதரை தரிசிக்க வெளியூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்தனர். வைபவ கடைசி நாளான நேற்று பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. நேற்று 3.50 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.


latest tamil news

அனந்தசரஸ் குளத்தில் உள்ள நிலவறைக்கு செல்லும் வழி.Advertisementதரிசனம் நடைபெற்ற 47 நாட்களில் ஒரு கோடியே 45 ஆயிரம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர். நேற்று நள்ளிரவு வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட பின் நடை சாற்றப்பட்டது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவரது தந்தை குமரி அனந்தன் மற்றும் குடும்பத்தினர் அத்தி வரதரை நேற்று தரிசனம் செய்தனர்.


latest tamil news

அத்தி வரதர் வைக்கப்படவுள்ள நிலவறை.


கல்வெட்டில் கூறியிருப்பது என்ன


கடந்த,1937ம் ஆண்டு, அத்திவரதர்,குளத்திலிருந்து எழுந்தருளிய விபரங்கள் குறித்த கல்வெட்டு, அத்தி வரதரை வைக்க உள்ள மண்டபத்தின் கீழ் உள்ளது.அந்த கல்வெட்டில் கூறியிருப்பதாவது: சாலிவாஹனசகாப்தம் - 1860 ஈசவா வருஷம் ஆனி மாதம் 29 (12.-7-.1937) ஸ்ரீ அத்தி வரதர் வெளியில் எழுந்தருள பண்ணி 48 நாள் வஸந்தேரத்ஸவ மண்டபத்தில் ஆராதிக்கப்பட்டு ஆவணி மாதம், 13ம் தேதி மறுபடி இந்த நடவாபியில் எழுந்தருள பண்ணப் பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news

அத்தி வரதருடன் உடனிருக்கப் போகும் நாகலிங்கம்.


இரண்டு ஆண்டு தாமதம் ஏன்


நீராழி மண்டபத்தில் அத்தி வரதர் வைக்கப்படும் இடத்தில் 2019ம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதாக குறிப்பிட்டு இன்று கல்வெட்டு வைக்கப்படுகிறது. இதேபோல் 1979 மற்றும் 1937ம் ஆண்டுகளில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்றதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் வைபவம் 1937ம் ஆண்டில் மட்டும் எப்படி மாறியது என சந்தேகம் எழுந்தது.


latest tamil news

கோடி மக்களின் மனதை வென்றவரே சென்று வாருங்கள் என அத்தி வரதரை வழியனுப்ப நிறைவு நாளில் திரண்டு வந்த பக்தர்கள்.

இது குறித்து விசாரித்தபோது வரதராஜ பெருமாள் கோவிலில் ராஜகோபுரம் அமைத்து 1939ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டதாகவும் அதனால் முன்கூட்டியே 1937ம் ஆண்டு அத்தி வரதர் வைபவம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


குளத்திற்குள் அத்தி வரதர் வைக்கப்படும் நிகழ்வு விபரங்கள்


அத்தி வரதரை அனந்தசரஸ் குளத்தில் மீண்டும் ஸ்தாபனம் செய்ய தேவையான பணிகள் நேற்று இரவில் இருந்து நடைபெற்றது. அத்தி வரதர் வைக்கப்படும் இடம் துாய்மை செய்யப்பட்டது.சுப்ரபாத பாடலும், மங்கள வாத்தியங்களுடன் அத்தி வரதர் இன்று காலை எழுந்தருளுவார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்; கோவிலில் இட்லி, பொங்கல், தோசை உள்ளிட்ட நிவேதனங்கள் சுவாமிக்கு படைக்கப்படும். வெட்டி வேர், பச்சை கற்பூரம் உள்ளிட்டவை சேர்த்து தைலகாப்பு அணிவிக்கப்பட்டு புஷ்பாஞ்சலி செய்யப்படும்.

மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மண்டபத்திலிருந்து அனந்தசரஸ் குளத்தில் உள்ள நான்கு கால் நீராவி மண்டபத்திற்கு அத்தி வரதரை எடுத்து சென்று ஸ்தாபனம் செய்யப்படும். மேற்கு திசையில் தலையும், கிழக்கு திசையில் சுவாமி பாதமும், இருக்கும்படி சயன கோலத்தில் அத்தி வரதர் ஸ்தாபனம் செய்யப்படுவார். பேழை எதுவும் இல்லாமல் அத்தி வரதர் மட்டுமே வைக்கப்படுவார். தண்ணீரில் மிதக்காமல் இருக்க சிலை மீது நாக வடிவிலான சிலைகள் வைக்கப்படும்.

அத்தி வரதரை ஸ்தாபனம் செய்யும் நிகழ்வை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அத்தி வரதரை ஸ்தாபனம் செய்த பின் பொற்றாமரை குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அனந்த சரஸ் குளத்தை நிரப்புவர்.


சுத்தமான தண்ணீர் நிரப்ப உத்தரவு


இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்படும் இடத்தை சுத்தமான தண்ணீரால் நிரப்பும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் காஞ்சிபுரத்தில் மழை கொட்டிய போதும், அத்திவரதரை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கொட்டும் மழையில் அத்திரவதரை தரிசித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-ஆக-201921:59:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நாற்பத்தெட்டு நாட்கள் உண்டியல் குலுக்கி, கடை வைத்து வெட்டி பயலுகளுக்கு சிறப்பு தரிசனம் கொடுத்து காசு பார்த்த கூட்டத்தில் ஒரு ஈ-னனுக்காவது, குளத்தை சுத்தம் - சுத்தம்ன்னா, நீச்சல் குள சுத்தம், செய்வோமுன்னு தோணித்தா? வீட்டிலே ஒண்ணுக்கு ரெண்டுன்னு நீச்சல் குளம் கட்டி பெருவாழ்வு வாழும் வெட்டி கூட்டம் வெறும் புடவை சாற்றி விட்டு தானே போனது. அந்த குளம் இன்னும் சேறும், சகதியுமாக தானே கெடக்கு. அத்தி வரதரை எடுத்த அடுத்த நாளே இந்த பாட்டை பாட ஆரம்பித்தேன்.. பாவம் வரதன், மீண்டும் அந்த சாக்கடை குளத்தில் தான் அடுத்த நாற்பது வருடங்கள் மூழ்கி கிடக்க வேண்டும்.. இனி அந்த குளத்தில் வரிசையாக உக்காந்து அத்திவரதருக்கு ஆராதனை, நைவேத்தியம், சங்கல்பம்,ன்னு சொல்லி ஒரு கூட்டம் அமர்ந்து வசூலிக்க, வரும் மு-ட்டா-ள் கூட்டம் கொண்டு வந்த பூக்கள், பழம், பிளாஸ்டிக் என்று குளத்தில் போட்டு அதை பெரும் சாக்கடையாக்கி .. வரதா, இவங்களுக்கு நல்லறிவே வராதா?
Rate this:
Cancel
T S Surendranath - Chennai,இந்தியா
17-ஆக-201915:12:32 IST Report Abuse
T S Surendranath SIMPLE SOLUTION IS .. JUST FIX A CAMERA INSIDE THE POOL AND TELE THE VIDEO OF SRI ATHIWARADAR IN A BIG SCREEN IN THE BIG MANDAPAM. THIS WILL FACILITATE ALL THE DEVOTEES TO HAVE DHARSHAN THROUGH OUT THE YEAR. IN ALL THE TEMPLES DHARSHAN THROUH CAMERA AND TVs ARE IN EXISTENCE. THIS IS IN NO WAY AGAINST HINDU RELIGION PRACTICE. HIGH COURT MAY CONSIDER THIS MESSAGE ITSELF AS A PETITION AND DECIDE.
Rate this:
Cancel
Dr-Muthu Krishnan - Chandigarh,இந்தியா
17-ஆக-201911:58:59 IST Report Abuse
Dr-Muthu Krishnan பார்த்தவரெல்லாம் பணக்காரர்கள் ஆனார்களோ இல்லியோ 48 நாட்களில் அத்திவாரதர் கோடிஸ்வரன் ஆகிவிட்டார். எல்லாம் வணிகநோக்கம், தந்திரம். பங்குகள் யார் யாருக்கு போகுமோ?? வாழ்க தமிழ்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X