மூவர்ண நிறத்தில் ஜொலித்த புர்ஜ் கலிபா| Dinamalar

மூவர்ண நிறத்தில் ஜொலித்த புர்ஜ் கலிபா

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (2)
Share

துபாய்: உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, இந்திய மூவர்ண தேசிய கொடி நிறத்திலான ஒளிவிளக்குகளால் பிரகாசித்தது.



latest tamil news



73வது இந்திய சுதந்திர தின விழா ஆக.,15ல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டிய நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா, நேற்றிரவு, இந்திய மூவர்ண தேசிய கொடியின் நிறத்திலான எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பிரகாசித்தது. இதைபோல், பாக்., சுதந்திர தினத்தை(ஆக.,14) கொண்டாடும் விதமாகவும், அந்நாட்டு தேசிய கொடி, புர்ஜ் கலிபா கட்டடத்தில் ஒளிர்ந்தது.


latest tamil news



வெள்ளிக்கிழமை இரவு 8.42 மணிக்கு பாக்., கொடியும், அதை தொடர்ந்து 8.44 மணிக்கு இந்திய கொடியும் எல்.இ.டி., விளக்குகளால் பிரகாசித்தது. யு.ஏ.இ.,யில் இந்தியா மற்றும் பாக்., நாட்டை சேர்ந்தவர்கள் பலரும் அதிகளவில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X