மோடியின் அறிவிப்புகளுக்கு சிதம்பரம் பாராட்டு

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
மோடி, அறிவிப்பு, சிதம்பரம், பாராட்டு

புதுடில்லி:பிரதமர் மோடியின் மூன்று அறிவிப்புகளை மனதார வரவேற்கிறேன் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடி ஏற்றி வைத்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:

* மக்கள் தொகை பெருக்கம் பல்வேறு சிரமங்களுக்கு வழி வகுக்கிறது. வருங்கால தலைமுறைகளுக்கு புதிய சவால்களை உருவாக்குகிறது. குடிநீர் பற்றாக்குறை, வன அழிப்பு, நிலச்சீர்

குடும்பக்கட்டுப்பாட்டை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் செல்வ வளத்தை உருவாக்கும் தொழிலதிபர்களை மதிக்க வேண்டும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என மூன்று முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்டார். பிரதமரின் உரையை கேட்க சோனியா, ராகுல் இருவருமே வரவில்லை. ஆனால் மோடியின் உரையை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

கேடுகள், வீடுகள் இன்மை, ஏழ்மை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுக்கு, மக்கள் தொகை பெருக்கமே காரணம்.

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டங்களை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. குடும்பங்களை சிறிய அளவில் வடிவமைத்து கொள்வது தேச பக்தி சார்ந்த செயல்.

* காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் தடை செய்யப்பட உள்ளது. பொது மக்கள் அனைவரும் துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் நாம், பூமிதாயைப் பாதுகாக்க வேண்டும்.

* செல்வந்தர்கள் மீது மத்திய அரசு அதிக வரி விதிப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது. செல்வத்தை உருவாக்குபவர்கள் மதிக்கப்பட வேண்டும். செல்வம் உருவாக்கப்பட்டால்
தான், அதை அனைவருக்கும் விநியோகிக்க முடியும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அரசின் ஒவ்வொரு
முடிவுகளையும், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் விமர்சித்து டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரையில் மூன்று முக்கிய அறிவிப்புகளுக்கு, பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
சிறிய குடும்பம் அமைத்தல், செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல், பிளாஸ்டிக்குக்கு தடை உள்ளிட்ட மூன்று அறிவிப்புகளை மனதார வரவேற்கிறேன்.இந்த மூன்றில் இரண்டாவது அறிவிப்பை நிதியமைச்சரும், அவருடைய துறைச் சார்ந்த வருமான வரி அதிகாரிகளும்,
பிரதமரின் துறையின் கீழ் உள்ள விசாரணை அதிகாரிகளும், (செல்வங்கள் உருவாக்குபவர்களை மதித்தல்) தெளிவாகவும், சத்தமாகவும் கேட்பார்கள் என்று நம்புகிறேன்.

முதல் அறிவிப்பை (மக்கள் தொகை கட்டுப்படுத்துதல்) மற்றும் மூன்றாவது அறிவிப்பை (பிளாஸ்டிக் தடை) மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும். மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு, ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
21-ஆக-201900:53:53 IST Report Abuse
Rajesh மோடிஜி சிரிச்சினே ஆப்பு அடிச்சிருவாரு.......
Rate this:
Cancel
Krishnamurthy Subramanian - Erode,இந்தியா
19-ஆக-201909:06:39 IST Report Abuse
Krishnamurthy Subramanian ஏற்கனவே இப்போவெல்லாம் 2 அல்லது 1 என்ற கணக்கில் தான் பிறக்கிறது.50 வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்னால் பிறந்த வீட்டிற்கு 5 அல்லது 6 குழந்தைகளா பிறக்கிறதா? இப்போ பிறக்கும் குழந்தை கணக்கு 50 வருடங்களுக்கு பிறகுதான் தெரியும். அப்போ பெத்துக்கோ என்பார்கள்.எல்லாமே அளவுதான் எக்காலத்திருக்கும் ஒத்து வரும்.இருக்கு இருக்குனு ஒரு காலத்தில் பெத்து தள்ளினார்கள். இப்போ குறைவு குறைவு என்று புலம்பி பெற்றுக்கொள்வதை குறைக்க சொல்கிறார்கள். ஏன் கல்யாணம் பண்ணுவதை 10 வருடத்திற்கு நிறுத்திவிடலாமே?
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
17-ஆக-201922:48:19 IST Report Abuse
TamilArasan என்ன பாராட்டினாலும் மொத்த குடும்பத்தையும் விட்டு விடாதீர்கள் கொல்லை கூட்டம் இந்தியாவை சுரண்டி உலகு எங்கும் சொத்து சேர்த்துள்ளார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X