காஷ்மீர் விவகாரம்: பாக்., - சீனா முயற்சி தோல்வி

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (16+ 39)
Advertisement

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்தது.







ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்த. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. காஷ்மீர் விவகாரத்தில் தலையிட வேண்டும்' என அமெரிக்கா சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உட்பட பல நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியது.ஆனால் 'இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; அதில் தலையிட மாட்டோம்' என அமெரிக்கா உட்பட பல நாடுகள் தெரிவித்தன.






இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பும் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருகிறது.இது பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்சியாக அமைந்தது. இதையடுத்து காஷ்மீர் பற்றி விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்ட வேண்டும் என கூறியது. இது தொடர்பாக கவுன்சிலின் தற்போதைய தலைமை நாடான போலந்து நாட்டின் துாதர் ஜோனா வெரோனெக்காவுக்கு கடிதம் எழுதியது.

அந்தக் கடிதம் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகள் மற்றும் 10 தற்காலிக உறுப்பினர் நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.நிரந்தர உறுப்பினர் நாடுகளில் சீனாவை தவிர மற்ற நாடுகள் இது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் சீனா மட்டும் 'காஷ்மீர் விவகாரம் பற்றி பாதுகாப்பு கவுன்சிலில் ரகசியமான முறையில் விவாதம் நடத்தலாம்' என தெரிவித்தது.

இதையடுத்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பாதுகாப்பு கவுன்சிலின் ரகசிய கூட்டம் நேற்று காலை துவங்கியது.இதில் கவுன்சிலின் ஐந்து நிரந்தர உறுப்பினர் நாடுகளான அமெரிக்கா பிரான்ஸ் பிரிட்டன் ரஷ்யா சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பெல்ஜியம் குவைத் பெரு போலந்து தென் ஆப்ரிக்கா ஜெர்மனி இந்தோனேசியா உள்ளிட்ட நிரந்தர உறுப்பினர் அல்லாத 10 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

இதுபற்றி ஐ.நா. சபை வட்டாரங்கள் கூறுகையில் ' இது ஒரு சாதாரண விவாதம் தான்' என்றன.
இந்நிலையில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை சர்வதேச
விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வியில் முடிந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் நேற்றிரவு தெரிவித்தது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1971ல் நடந்த போருக்கு பின் காஷ்மீர் விவகாரம் பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. 48 ஆண்டுக்கு பின் காஷ்மீர் விவகாரம் பற்றி மீண்டும் பாதுகாப்பு கவுன்சில் நேற்று விவாதித்துள்ளது.


டிரம்பிடம் இம்ரான் கெஞ்சல்



அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தொலை
பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜம்மு - காஷ்மீர் நிலவரம் பற்றி டிரம்பிடம் கவலை தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்தார். மேலும் 'காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நிலைமையால் தெற்காசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக
தெரிவித்த இம்ரான், இந்த விவகாரத்தில் அமெரிக்கா உதவி செய்ய வேண்டும்' என
கெஞ்சியதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு அளித்து வரும் ஆதரவை, பாக்., அரசு முதலில் கைவிட வேண்டும். அப்போது தான், இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி பேச்சை துவங்க முடியும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு, அப்பாவி இந்தியர்கள் பலியாவதை, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

சையத் அக்பருதின்

ஐ.நா.,வுக்கான இந்திய துாதர்.

Advertisement




வாசகர் கருத்து (16+ 39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-ஆக-201920:44:53 IST Report Abuse
அம்பி ஐயர் இதற்காகத்தானே ஐந்து ஆண்டுகளில் அதிகமான வெளி நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.... மோடிஜி...
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
17-ஆக-201919:24:44 IST Report Abuse
Arasu திமுக சரவணன், ரெஃப்யூபிலிக் டிவியில் காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமல்ல என்றார். ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை
Rate this:
Share this comment
Venramani Iyer - chennai,இந்தியா
17-ஆக-201923:00:56 IST Report Abuse
Venramani Iyerவரலாறு முக்கியம் அமைச்சரே...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஆக-201915:46:47 IST Report Abuse
Endrum Indian இதிலிருந்து மோடியின் செல்வாக்கு அயல்நாட்டில் என்ன என்று புரிகின்றது அல்லவா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X