எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மின்வாரியம் பெயரில் போலி விளம்பரம்: பட்டதாரிகள் ஏமாறுவது தடுக்கப்படுமா

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை:மின்வாரியம் பெயரில் வெளியாகும் போலி வேலை வாய்ப்பு விளம்பரங்களால் பட்டதாரிகள் ஏமாறும் சூழல் உருவாகியுள்ளது.



latest tamil news




தமிழக மின்வாரியத்தில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனால் உதவி பொறியாளர், கள உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளதாக இரு ஆண்டுகளாக சட்டசபையில் எரிசக்தி துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்புகள் வெளியாகின.

ஆனால் ஊழியர்களை தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மின் வாரியம் வெளியிடவில்லை. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மின் வாரியம் பெயரில் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.

இதுகுறித்து பட்டதாரிகள் கூறியதாவது:'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மின் வாரியத்தில் 34 ஆயிரத்து 800 ரூபாய் சம்பளத்தில் 2,450 பேர் வேலைக்கு தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என சில போலியான இணையதள முகவரிகள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை உண்மை என நம்பி பலரும் விண்ணப்பிக்க முயற்சிக்கின்றனர். இதனால் போலி இணையதளங்களில் தேர்வு கட்டணத்தை செலுத்தி பலர் ஏமாற வாய்ப்புள்ளது. எனவே போலி விளம்பரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவை குறித்து மின் வாரியம் பட்டதாரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
17-ஆக-201916:50:23 IST Report Abuse
சுந்தரம் போலிகளுக்கு ஊடகங்களும் ஒரு காரணம். பிரபல இந்திய துறையின் அறிவிக்கையை, போலி முத்திரையுடன் இந்திய அரசின் இலச்சினையான மூன்று சிங்கங்கள் பொறித்த செய்தியாக ஊடகங்கள் வெளியிடும் போது, அரசு பணிக்கு சேர வேண்டும் என்று ஆர்வமிருப்பவர்கள் போலி விளம்பரங்களை கண்டு ஏமாறுவது இயற்கையே.
Rate this:
Cancel
17-ஆக-201913:41:23 IST Report Abuse
யாரோ வாரியமே போலி தான்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
17-ஆக-201904:35:42 IST Report Abuse
Natarajan Ramanathan எந்த ஒரு அரசு வேலைக்கும் பணம் கொடுத்து சேர நினைப்பவர்கள் ஏமாந்து புகார் கொடுத்தால் முதலில் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X