கிரீன்லாந்து தீவை விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி?

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (13)
Advertisement
கிரீன்லாந்து தீவை  விலைக்கு வாங்க டிரம்ப் முயற்சி?

ஸ்டாக்ஹோம்: அமெரிக்காவுக்காக, ஆர்டிக் தீவான, கிரீன்லாந்தை விலைக்கு வாங்கலாமா என, டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டது கிரீன்லாந்து. டென்மார்க்கின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தாலும், தனி பிரதமர், பார்லிமென்ட் என, கிரீன்லாந்து, தன்னாட்சி அதிகாரத்துடன் உள்ளது. வட அமெரிக்க கண்டத்தில், வடக்கு அட்லான்டிக் மற்றும் ஆர்டிக் கடலுக்கு இடையில் அமைந்துள்ள, மிகப்பெரிய அழகிய தீவு இது. பெரும்பாலும் பனியால் சூழப்பட்டுள்ள இந்த தீவு, இயற்கை தாதுக்கள் நிரம்பியது. இங்கு, 57 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். மொத்தம், 7.72 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்த தீவை, அமெரிக்காவுக்காக விலைக்கு வாங்கலாமா என, தன் ஆலோசகர்களுடன், அந்நாட்டு அதிபர் டிரம்ப் ஆலோசனை நடத்தியதாக, செய்திகள் வெளியாகின.


அதிபர் பதவி வகிப்பதற்கு முன், ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர், டொனல்டு டிரம்ப். கிரீன்லாந்து தீவில் கிடைக்கும் துாய்மையான குடிநீர், மீன்வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலாவுக்கான கவர்ச்சி மூலம் வரும் லாபத்தை கணக்கு பார்த்து, இந்த முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், கிரீன்லாந்தின், வெளியுறவு அமைச்சகம், தங்கள் தீவில் வர்த்தகம் தொடர்பான பேச்சுக்கு தயாராக இருப்பதாகவும், அதே நேரம், எக்காரணம் கொண்டும் தீவு விற்பனைக்கு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து, டென்மார்க் பிரதமர் மெட் பிரடிரிக்சென், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அதே நேரம், முன்னாள் பிரதமர், லார்ஸ் லோக் ராஸ்முசீன், ''இது ஒரு முட்டாள் தின நகைச்சுவையாகத் தான் இருக்கும்; நிச்சயம் உண்மையாக இருக்காது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
17-ஆக-201911:17:54 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஏற்கனவே அணு ஆயுத கழிவுகளை அந்த தீவில் அமெரிக்க புதைந்துள்ளது, இப்பொழுது கசிவு ஏற்பட்டு பனி பாறைகள் உருகிவருகிறது, அப்பகுதி கடல் நீரில் அணுக்கழிவுகள் கலந்துள்ளது புவியும் வெப்பமாகி கொண்டிருக்கிறது இதை மறைக்க குளோபல் வாமிங் என்று சொல்லி உலக மக்களை திசை திருப்பியது, மேலும் உலக மக்களுக்கு எரிபொருளுடன் சேர்த்து கார்பன் வரியை போட்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் நல்ல வருமானம் பெறுகின்றனர், மனசாட்சிக்கு பயந்து பிரான்சில் நடைபெற்ற புவி வெப்பமாதலை தடுக்கும் மாநாட்டில் இந்த இரு நாடுகளும் கையொப்பம் இடாமல், ஏன் கலந்து கொள்ளாமல் வெளியேறியது, இப்பொழுது கிரீஸ் தீவை விலைக்கு வாங்கி அங்கே அணு கழிவுகளின் புதை கூடத்தை ரகசியமாக அமைக்க தான் அந்த தீவை அமெரிக்கா விலைபேசிவருகிறது..................
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
17-ஆக-201918:42:28 IST Report Abuse
Pannadai Pandianபுரிஞ்சிடிச்சி …...நீ அமைதி மார்க்கம்னு…......
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஆக-201910:27:44 IST Report Abuse
Lion Drsekar இங்கு இருக்கும் எம்மக்கள் அதை வாங்கியிருக்கப்போகிறார்கள் பார்த்து வாங்குங்கள், இங்கு , மற்றும் அங்கு , மற்றும் எங்கெல்லாம் விலை மதிப்புள்ள சொத்து இருக்கிறதோ அவைகள் எல்லாம் எங்கள் "குடி" மன்னர்களது, வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
17-ஆக-201905:40:51 IST Report Abuse
Raj எடப்பாடி கூட தமிழ்நாட்டை விலை பேச தான் வருகிறார் போலும்...இது வெறும் புரளி.
Rate this:
Share this comment
17-ஆக-201909:00:51 IST Report Abuse
pannadai pandianthat will happen once DMK assumes power need strong insurance for wives theft in future ie after 2021..........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X