பொது செய்தி

தமிழ்நாடு

அனைத்து துறையினருக்கும் முதல்வர் நன்றி

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 அனைத்து ,துறையினருக்கும்,முதல்வர்,நன்றி

சென்னை:அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடப்பதற்காக உழைத்த, அனைத்து துறையினருக்கும், முதல்வர், இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தில் இருந்து எழுந்தருளியுள்ள, அத்திவரதர் வைபவம், ஜூலை, 1 முதல், சிறப்பாக நடந்து, இன்று நிறைவடைய உள்ளது.
பாதுகாப்பு, குடிநீர், அன்னதானம், மருத்துவ முகாம்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு வழி தரிசனம் உள்ளிட்ட வசதிகளை, அரசு செய்து கொடுத்தது.

ஹிந்து சமய அறநிலையத்துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட, அரசின் பல்வேறு துறையினர், தேசிய மாணவர் படையினர் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைந்து, மிக சிறப்பாக பணியாற்றினர். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்களும், இரவு பகல் பாராமல், மிக சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

இதன் காரணமாக, அத்திவரதர் வைபவம் மிகச் சிறப்பாக நடந்தது. நாடு முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள், அத்திவரதரின் தரிசனம் பெற்றுள்ளனர்.வைபவம் நடந்த காலத்தில், இரவு, 12:00 முதல், அதிகாலை, 4:00 மணி வரை, கண் விழித்து, காஞ்சிபுரம் நகரில், துாய்மை பணிகளில் ஈடுபட்ட, துப்புரவு பணியாளர்களின் பணி மிகவும் மெச்சத்தக்கது.

இவர்கள், மேலும் இரண்டு நாட்கள் தங்கி, காஞ்சிபுரம் நகரில், துாய்மை பணிகளை மேற்கொள்வர். காஞ்சிபுரம்நகரில் வசிக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும், 48 நாட்களும், வருகை தந்தை பக்தர்களை, வரவேற்று உபசரித்தது பாராட்டுக்குரியது. என் வேண்டுகோளை ஏற்று, வைபவ காலத்தில், அன்னதானத்திற்கு நிதியுதவியும், ஆதரவும் வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும், மனமார்ந்த நன்றி; பாராட்டுக்கள்.

தன்னலம் பாராமல், இரவும், பகலும், அயராது உழைத்திட்ட, அனைத்து துறையினருக்கும், குறிப்பாக, வருவாய் துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சி துறையினருக்கு, மீண்டும் ஒரு முறை நன்றி.இவ்வாறு, முதல்வர், இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan paramasivam - Abhunakala,கத்தார்
17-ஆக-201922:38:29 IST Report Abuse
Natarajan paramasivam ஐயா நன்றி இருக்கட்டும், இந்த வைபவத்தில் வசூலான தொகை அனைத்தும் இந்து மத நம்பிக்கை உள்ள பாமரன் முதல் பணம் படைத்தவன் வரை உண்டு. தயவு செய்து அந்த பணத்தை ஆட்டை போடாம காஞ்சி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை பராமரித்தால் உமக்கு கோடான கோடி நன்றி.
Rate this:
Share this comment
Cancel
17-ஆக-201906:18:17 IST Report Abuse
sridharan aravamudan I congratulate Tamil Nadu police for the excellent job and arrangement and patience they have shown.they may have come under criticism but with lot of constraints like space, time etc police have done excellent job, with out which many incidence would have happened. Government involved and supported well all the unexpected crowd.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஆக-201904:59:59 IST Report Abuse
Mani . V "அத்தி வரதர் வைபவம் சிறப்பாக நடப்பதற்காக உழைத்த, அனைத்து துறையினருக்கும், முதல்வர், இ.பி.எஸ்., நன்றி தெரிவித்துள்ளார்". நல்லாட்சி நடத்த வழியில்லை. இதில், கிரிக்கெட்டில் நேராக வரும் பந்தை லாவகமாக சைடில் திருப்பி விட்டு சிக்ஸருக்கு அனுப்புவது மாதிரி, பிரச்சினையை நன்கு திசை திருப்புகிறார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X