அரசியல் செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்டம் 2ஆக பிரிக்கப்படுமா?

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சேலம் : வேலுார் மாவட்டம், மூன்றாக பிரிக்கப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.முதல்வர், பழனிசாமி சுதந்திர தின உரையில், 'வேலுார் மாவட்டம், மூன்றாக பிரிக்கப்படும்' என, அறிவித்தார். இதன் மூலம், தமிழகத்தில், மாவட்டங்களின் எண்ணிக்கை, 37 ஆக உயர்ந்தது. தற்போது, தமிழகத்தில், 35 லட்சம் மக்கள் தொகை, 11 சட்டசபை தொகுதிகள், 13 தாலுகாக்கள், 20 ஒன்றியங்கள், 5,245 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடன், பெரிய மாவட்டமாக, சேலம் விளங்குகிறது. நிர்வாக வசதிக்காக, இந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.


இது குறித்து, வருவாய்த் துறை அலுவலர்கள் கூறியதாவது: சேலத்தை பிரித்து, ஆத்துாரை தலைமையிடமாக கொண்டு, புது மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால், பழனிசாமி முதல்வரான பின், இடைப்பாடியை தலைமையிடமாக கொண்டு, மாவட்டத்தைபிரிக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி, இடைப்பாடி, சங்ககிரி, ஓமலுார், காடையாம்பட்டி, மேட்டூர் ஆகிய தாலுகாக்களுடன் பிரிக்கப்படும்போது, சேலம் மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் மேட்டூர் அணை, புதிய மாவட்டத்தின் அடையாளமாக மாறி விடும்.


இதனால், மாவட்டத்தை பிரிப்பதில், தயக்கம் நிலவியது. இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சியை சமாளிக்க, நிர்வாகத்தை செம்மையாக நடத்த, மாவட்டத்தை பிரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக, 13 சட்டசபை தொகுதிகள் அடங்கிய வேலுாரை, மூன்றாக பிரிக்கும் போது, 11 சட்டசபை தொகுதிகள் அடங்கிய சேலத்தை, குறைந்தபட்சம் இரண்டாக பிரிப்பது அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-201914:31:26 IST Report Abuse
mavattam piripor sangam so eventually my street will also be divided into two district... semma..so ellorukum pathavi..inni nerya mavatta seyalalargal..no issues within the party..ammam tamil nata eppo renda piripinga.. TWO CM irrukangala...
Rate this:
Share this comment
Cancel
Diya -  ( Posted via: Dinamalar Android App )
17-ஆக-201912:39:54 IST Report Abuse
Diya How is the of address in Aadhaar, PAN, bank, etc taken care when districts are split.
Rate this:
Share this comment
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
17-ஆக-201912:02:50 IST Report Abuse
A.Gomathinayagam 234 சட்டசபை தொகுதி களை 500 ஆக உயர்த்துங்கள். 75பேர் அமைச்சராகலாம் 3 பேர் துணை முதல் அமைச்சர் பதவி கிடைக்கும். பொறுப்புக்கள் பகிர்ந்து அளிக்க பட வேண்டிய ஒன்று .மக்கள் யாரையும் நேரடியாக சந்தித்து குறைகளை களையலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X