இந்திய தூதரக அதிகாரிக்கு'சம்மன்'; பாகிஸ்தான் மீண்டும் பூச்சாண்டி

Updated : ஆக 18, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பாகிஸ்தான்,பூச்சாண்டி,சம்மன்

இஸ்லாமாபாத்: 'எல்லையில், இந்திய ராணுவம், அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக கூறி, இந்திய துாதரகத்துக்கு, பாகிஸ்தான், மூன்றாவது முறையாக, 'சம்மன்' அனுப்பியது.

மத்திய அரசு, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை, ரத்து செய்தது முதல், இந்திய - பாகிஸ்தான் எல்லையில், பதற்றம் நிலவி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம், இந்திய ராணுவ நிலைகள் மீது, தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.ஆனால், 'இந்திய ராணுவம் தான், அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது' என, பாகிஸ்தான் புலம்பி வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், முகமது பைசல் கூறியதாவது: எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில், இந்திய ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம், இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட, மூன்று பேர் இறந்தனர். இது தொடர்பாக, கண்டனம் தெரிவிக்க, இந்திய துாதருக்கு, வெளியுறவு அமைச்சகம் சார்பில், சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, ஆஜரான துணை துாதர், கவுரவ் அலுவாலியாவிடம், இந்திய ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு, வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. 'போர் நிறுத்த ஒப்பந்தத்தை, இந்திய ராணுவம் மதிக்க வேண்டும்' என, அவரிடம் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஏற்கனவே, கடந்த, 14, 15ம் தேதிகளில், இந்திய துாதருக்கு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, இந்திய திரைப்படங்களை வெளியிட, பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதனால், அந்நாட்டில், இந்திய திரைப்படங்களின், சி.டி.,க்கள் விற்பனை அதிகரித்துள்ளது; அவற்றை பறிமுதல் செய்ய, பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.


மற்றொரு பூச்சாண்டி:

காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில், 36 சாலைகளுக்கும், ஐந்து பூங்காக்களுக்கும், 'காஷ்மீர்' என, பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப் மாகாண முதல்வர், உஸ்மான் புஸ்தர் கூறுகையில், 'பஞ்சாப் மாகாணத்தில் உள்ள, 36 மாவட்டங்களில், தலா ஒரு சாலைக்கு, 'காஷ்மீர் சாலை' என, பெயர் வைக்கப்படும்; ஐந்து முக்கிய பூங்காக்களுக்கு, 'காஷ்மீர் பூங்கா' என பெயர் வைக்கப்படும்' என்றார்.


ரக் ஷா பந்தன் கொண்டாட்டம்:

பாகிஸ்தானின், கைபர் பக்துன்வாலா மாகாணத்தில் உள்ள ஹிந்துக்கள், நேற்று முன்தினம், ரக் ஷா பந்தன் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.பெஷாவர் உட்பட, மாகாணத்தின் பல பகுதிகளில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பெண்கள், அனைவருக்கும் ராக்கி கட்டினர்.


மசூதியில் குண்டு வெடித்து 5 பேர் பலி:

“பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில், குச்லக் பகுதியில் உள்ள மசூதியில், நேற்று காலை குண்டு வெடித்தது. இதில், ஐந்து பேர் பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. குவெட்டா நகரில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும், நான்காவது முறையாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம், 28ல் நடந்த குண்டு வெடிப்பில், மூன்று பேர் பலியாகினர்; 30 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.


இணைப்பு ரயில் ரத்து:

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் வரை, 'தார்' எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது.கராச்சியிலிருந்து, இந்திய எல்லைவரை, பாகிஸ்தானும், ஜோத்பூரிலிருந்து பாகிஸ்தான் எல்லை வரை, இந்தியாவும், தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இயக்கி வந்தன.காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, கடந்த, 9ம் தேதி, பாகிஸ்தான் நிறுத்தியது. இதையடுத்து, இந்தியாவும், ஜோத்பூரிலிருந்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள முனாபாவ் வரை இயக்கி வந்த, தார் எக்ஸ்பிரஸ் இணைப்பு ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
17-ஆக-201923:11:37 IST Report Abuse
Asagh busagh 90களில் மட்டி பயலுக காங்கிரஸின் ஆட்சியில் பலமுறை நம்ம நாட்டுக்குள்ள ஊடுருவி குடைச்சல் கொடுத்ததை பலவீனமா வேடிக்கை பார்க்க இப்போதைய இந்தியா காங்கி அடிமைகளின் நாடு அல்ல. அதனால பதிலடியா நாங்களும் ஊடுருவுறோம். ஆனாலும் நுழைவது எங்கள் நாட்டின் பகுதி அதனால சும்மா கத்தாம ஓரமா ஓடி போயி உக்காரு பாக்கிகளா.
Rate this:
Share this comment
Cancel
மாயவரத்தான் - chennai,இந்தியா
17-ஆக-201913:40:20 IST Report Abuse
மாயவரத்தான் பாக்கிஸ்தான் பேரையே கஸ்மேரஸ்தான் என்று மாற்றிக்கொண்டாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஆக-201913:06:27 IST Report Abuse
இந்தியன் kumar இப்படி பெயரை சூட்டியாவது திருப்தி பட்டு கொள்ள வேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X