'அயோத்தியில் ஹிந்து தெய்வங்களின் உருவங்கள்'

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: 'அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டடத்தில், ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன' என, உச்ச நீதிமன்றத்தில், ராம் லல்லா விராஜ்மான் அமைப்பு தெரிவித்து உள்ளது.







ஆய்வு:


உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் இடம்பெற்ற, அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை, தினசரி விசாரித்து வருகிறது. விசாரணையின், ஏழாவது நாளான நேற்று(ஆக.,16) ராம் லல்லா விராஜ்மான் சார்பில், மூத்த வழக்கறிஞர், சி.எஸ்.வைத்தியாதன், தன் வாதத்தை தொடர்ந்தார்.

அவர் கூறியதாவது: அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில், 1950-ம் ஆண்டு ஆகஸ்ட், 16ல், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் ஆய்வு செய்துள்ளார். ஆணையரின் அறிக்கையில், 'அப்போது மசூதியாக இருந்த கட்டடத்தின் துாண்களில், சிவன், விஷ்ணு உள்ளிட்ட ஹிந்து தெய்வங்களின் உருவங்கள் இருந்தன' என, தெரிவித்து உள்ளார்.






அறிக்கை:


ஹிந்து தெய்வங்களின் உருவங்கள், மசூதியில் இடம் பெற சிறிதும் வாய்ப்பில்லை; கோவில்களில் மட்டுமே இருக்கும். அதனால், ஹிந்துக்களின் புனித பூமியாக, பல்லாயிரம் ஆண்டுகளாக அயோத்தி இருந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். ஆணையர் அளித்த அறிக்கையையும், அந்த சமயத்தில், மசூதிக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வைத்திய நாதன் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-201920:59:54 IST Report Abuse
ஆப்பு இதுக்கு ஒரே தீர்வு ராமர் இஸ்லாமியர் கனவில் வந்து நாந்தச்ன் முன்னாடி அங்கே இருந்தேன்னு சொல்லணும், இல்லேன்னா அல்லா இந்துக்களின் கனவுல வந்து பாபர் காலி எடத்துலதான் மசூதி கட்டுனார்னு சொல்லணும். ரெண்டும் நடக்கப் போவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-ஆக-201920:25:44 IST Report Abuse
அம்பி ஐயர் ஆதி மனிதன் ஆதம் இஸ்லாத்தின் முதல் தூதரா....??? அப்போ இஸ்லாத்தே கிடையாதே....??? எப்படி முதல் தூதுவராக முடியும்....??? அதோடு அந்த ஆதம் தானே கிறிஸ்தவர்களும் தங்களது முதல் மனிதன் என்று சொல்கிறார்கள்... அது எப்படி ஒரு நபர் இஸ்லாத்திலும் கிறிஸ்தவத்திலும் இருக்க முடியும்....??
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஆக-201920:53:05 IST Report Abuse
Rafi இஸ்லாம் என்பது முதல் மனிதலிருந்து துவங்கியது, முதல் மனிதனை படைத்து விட்டாலும் அவருக்கு வழி காட்டியாக வேண்டும், அவ்வப்போது வழிமுறைகளை அல்லாஹ் வழங்கி கொண்டிருந்தான், அவனுடைய தூது செய்திகளை வானவர் தலைவர் ஜிபிரீல் அவர்கள் மூலம்மாக வொவொரு தூதர்களுக்கும் அனுப்பி கொண்டிருந்தான், அந்த ஜிபிரீல் அவர்கள் தான் முதல் மனிதரிலிருந்து கடைசியாக வந்த தூதர்களான மூஸா நபி, தாவூத் நபி, ஈஷா நபி மற்றும் கடைசி முஹம்மது நபி வரை தூது செய்தியை அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தவர். இதை குரான் தெளிவுபடுத்தியுள்ளது. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும், யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஆதம் அவர்கள் தான் முதல் மனிதர் அதையே தான் முஹம்மது நபி அவர்களும் வழிமொழிந்துள்ளார்கள். முதல் மனிதருக்கு சட்டம் வகுத்து கொடுக்க முடியாது, சிறுக, சிறுக ஓவ்வொரு நபிகளுக்கும் வழங்கப்பட்டு வந்துள்ளது, கடைசி நபி என்பதனால் மனித குலத்திற்கு தேவையான அனைத்து வழங்கி குரானாக முஹம்மது நபிக்கு வழங்கப்பட்டது. குரானை வழங்க இருப்பதனால் அதை கொண்டு வரும் முஹம்மது நபியின் வரவை பற்றிய செய்திகளை முன்கூட்டியே அனைத்து நபிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அல்லாஹ் குரானில் கூறுகின்றான். உங்கள் வேதத்தில் யார் வருவார் என்று முன்னறிவிப்பு வந்துள்ளது அவரோடு முஹம்மது நபி அவர்களை ஓப்பிட்டு பார்த்து கொள்ளலாம். விடை கிடைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
17-ஆக-201913:36:14 IST Report Abuse
நக்கல் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் சென்னை உயர் நீதிமன்றம் மதம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாங்கள் தலை இட முடியாது என்று அத்திவரதர் கோவில் விஷயத்தில் தீர்ப்பு வழங்கியது... இது ஏன் சபரிமலை, அயோத்திக்கு பொருந்தாது.. புரியவில்லை..
Rate this:
Share this comment
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
17-ஆக-201920:22:30 IST Report Abuse
அம்பி ஐயர்மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நம்பிக்கைகளில் தான் நீதிமன்றம் தலையிட முடியாது..... ஒரு மதத்துக்குச் சொந்தமான இடத்தை அடுத்த மதத்தவர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டினால் ஏன் நீதிமன்றம் தலையிடாது....???...
Rate this:
Share this comment
Rafi - Riyadh,சவுதி அரேபியா
20-ஆக-201921:46:09 IST Report Abuse
Rafi அதற்கெல்லாம் சாட்சிகள் வலுவாக ஆதாரத்துடன் வழங்க வேண்டும், வெறும் நம்பிக்கையை மட்டுமே சாட்சியாக எடுத்து கொண்டால் சரியான நீதியாக இருக்கும்மா? ஆகவே தான் இந்துத்துவ அமைப்பினர் நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று கூறிவருவதையும் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும். அவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்றால் சிறுபான்மையினர் தானே அடக்கிவிடுவோம் என்பதில் குறியாக இருக்கின்றார்கள். அவர்களை போல், காந்திஜி சொல்லிவிட்டார் என்பதற்காக ஆங்கில கல்வி முறையையே உதறி தள்ளிவிட்டு தேசப்பற்றை காண்பித்த சிறுபான்மையினரான நாங்கள் பேச இயலாது, நீதி மன்றம் முடிவு செய்யட்டும் என்று விட்டுவிட்டோம். உங்கள் வீடு இருக்கு, அதை வேறு ஒருவர் பிடிங்கி கொண்டால் எப்படி உங்கள் மனம் இருக்குமோ, அதே போன்ற நிலையில் இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள். இங்கு மதம் என்ற உணர்வுடன் பிரச்னையை அணுக வற்புறுத்துகின்றார்கள். நாட்டில் உள்ள பெரும்பான்மையான இந்து மக்கள் பள்ளியை இடித்ததை ஏற்கவில்லை என்பதை அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகின்றார்கள். அரசியல் வாதிகளை கண்டால் துஷ்டானை கண்டால் தூர விலகு என்ற கோணத்தில் சாமானிய சராசரி மக்கள் விலகி இருக்கின்றார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X