பொது செய்தி

இந்தியா

தீவிர சிகிச்சையில் அருண் ஜெட்லி

Added : ஆக 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும், அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து, ஜனாதிபதி மற்றும் மத்திய அமைச்சர்கள் விசாரித்து அறிந்தனர்.






பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, 9ம் தேதி, டில்லியில் உள்ள, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மருத்துவமனைக்கு சென்று அருண் ஜெட்லியைப் பார்த்தார். பின், துணை ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'மருத்துவர்கள் தரும் சிகிச்சையை, ஏற்றுக் கொள்ளும் வகையில், அருண் ஜெட்லியின் உடல்நிலை உள்ளது' என, கூறப்பட்டிருந்தது.


அறிக்கை:


அதன் பின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்களும், ஜெட்லியின் உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் விசாரித்து அறிந்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, ஜெட்லியின் உடல்நலம் குறித்து, டாக்டர்களிடம் கேட்டறிந்தார். செயற்கை சுவாச கருவி உதவியுடன், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதென தகவல்கள் கூறினாலும், மருத்துவமனை சார்பில், எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஜெட்லிக்கு தற்போது, 66 வயது. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாலும், சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பின், உடல்நலம் குன்றிவிட்டார்.






ஏற்க இயலாது:


சமீபத்திய லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றதும், மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, 'தன் உடல்நிலை காரணமாக, தம்மால் எந்த பொறுப்பும் ஏற்க இயலாது' என, தானாகவே முன்வந்து கூறி, அமைச்சர் பதவிக்கான வாய்ப்பை, அருண் ஜெட்லி மறுத்துவிட்டார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
17-ஆக-201915:40:50 IST Report Abuse
Amar Akbar Antony ஜெட்லீ இந்த தேசத்தின் நன்மகன்.
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
17-ஆக-201914:47:39 IST Report Abuse
முதல் தமிழன் கடவுள் பொறுத்து கொடுத்தாலும் பொருத்தமா கொடுக்கிறார்...அருளாசியை...
Rate this:
Share this comment
Cancel
17-ஆக-201913:30:41 IST Report Abuse
நக்கல் நல்ல மனிதர், உடல்நிலை தேறி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X