பொது செய்தி

இந்தியா

வாக்காளர் அட்டை ஆதாருடன் இணைப்பு?

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement

புதுடில்லி: தேர்தல்களில், கள்ள ஓட்டுப் போடுவதை தடுக்க வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



latest tamil news



நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஆதார் எண் அவசியம் என, மத்திய அரசு தீவிரம் காட்டியபோது, தேர்தல் ஆணையம் அடக்கியே வாசித்தது. வாக்காளர் அட்டையை, ஆதாருடன் இணைப்பதையும் அவரவர் விருப்பம் என்ற, அளவிலேயே நின்றது. ஆனால், தற்போது, தேர்தல் ஆணையம், இவ்விஷயத்தில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளது.


latest tamil news



மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தலைமை தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தின் விபரம்: இதுவரையில், 32 கோடி ஆதார் எண்கள், வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில், கள்ள ஓட்டுப் போடுவது உட்பட, பல்வேறு தில்லுமுல்லுகளை களைவதற்கு, ஆதார் எண் இணைப்பு அவசியம். எனவே, ஆதார் எண்ணை, வாக்காளர் அட்டையுடன் இணைப்பதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950ல், திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201904:56:55 IST Report Abuse
ManiS Now our DMK and AIADMK will speak. Particularly Congress.
Rate this:
Cancel
P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
17-ஆக-201914:14:52 IST Report Abuse
P.Sekaran இப்பொழுது நிறைய பெயர்கள் இரண்டு மூன்று சட்ட மன்ற தொகுதிகளில் உள்ளது அவர்கள் இரண்டு வாக்குகள் போடுகிறார்கள்.ஆதார் எண்ணை இணைத்தால் போட முடியாது அரசியல் காரர்கள் உடன்பட மாட்டார்கள். கள்ள ஒட்டு போட முடியாது
Rate this:
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
17-ஆக-201910:56:30 IST Report Abuse
Needhiyin Pakkam Nil ஆதார் என்பதும் அடையாளம் முகவரி தான், வாக்காளர் அட்டை என்பதும் அடையாளம் முகவரி தான், எனவே ஆதார் இருக்கும் போது வாக்காளர் அட்டையே தேவையில்லை, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்தாலே போதுமானதாக இருக்கும்...............
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X