பொது செய்தி

இந்தியா

ஆள் குறைப்பில் ஆட்டோத்துறை நிறுவனங்கள்

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement

புதுடில்லி : கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆட்டோத்துறை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக முதலீடுகளை நிறுத்தியதாக அறிவித்த ஆட்டோ நிறுவனங்கள், தற்போது வேலையாட்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.



latest tamil news


கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி, ஏறக்குறைய 3000 தற்காலிக பணியாளர்கள் தங்கள் நிறுவனத்தில் வேலை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போன்ணு ஹீரோ மோட்டோகார்ப், அசோக் லேலண்ட், டிவிஎஸ் குஓமம், லுகாஸ் டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் வேலையில்லை என அறிவிப்பு வெளியிட்டுள்ளன. பங்குச்சந்தை வீழ்ச்சியால் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை உற்பத்தியை நிறுத்துவதாக பிரபல மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. அசோக் லேலண்ட் நிறுவனமும் ஆகஸ்ட்டில் 2 நாட்கள் வேலையில்லாத நாட்களாக அறிவித்துள்ளது.


latest tamil news


அதிகபட்சமாக மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் 8 முதல் 14 நாட்கள் வரை வேலை இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 42 சதவீதம் வரை நடப்பு ஆண்டில் முதலீடுகளை குறைத்துள்ளதாகவும் இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஏப்றல் முதல் ஜூலை வரையிலான காலாண்டில் எஸ்யுவி ரக கார் விற்பனை 21.5 சதவீதமும், லாரி மற்றம் பஸ் விற்பனை 13.5 சதவீதமும், மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை 13 சதவீதமும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய விற்பனை சரிவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201904:50:59 IST Report Abuse
Nepolian S இதைவிட கேவளமாக போகும்..
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
17-ஆக-201920:02:50 IST Report Abuse
J.Isaac புது இந்தியா. இதை பற்றி எல்லாம் சிந்திக்கக்கூடாது என்றுதான் ஜியோவின் புதிய அறிவிப்பு
Rate this:
Cancel
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
17-ஆக-201918:08:15 IST Report Abuse
Krishnamoorthi A N நாளுக்குநாள் புதிய டெக்நாலஜி வளர்ந்து வருகையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வாடிக்கையே. இது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்குமேல் இருந்த மாடுவண்டிகள், குதிரை வண்டிகள் இப்போது முற்றிலும் அழிந்துவிட்டது. அன்று மாடுகள் புட்டி கிணற்றில் தண்ணீர் இறைத்தது இன்று அறவே இல்லை. நாற்பது ஆண்டுகளுக்குமுன் கொடிகட்டி பறந்த வாழ்வு ரேடியோக்கள் மறைந்து ட்ரான்சிஸ்டருக்கு மாறி, பின்பு ஐ சி டெக்னோலஜிக்கு மாறி இப்போது எப் எம் க்கு மாறிவிட்டது. 1980 களில் கொடிகட்டி பறந்த ஆடியோ டேப் ரெக்கார்டர்கள் இப்போது சுத்தமாக ஒழிந்து விட்டது. இப்போது மைக்ரோ எஸ் டி கார்டுக்கு மாறிவிட்டது. இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு கொடிகட்டி பறந்த வீடியோ கேசட் மறைந்தே விட்டது. சி டி பிளேயர், டி வி டி பிளேயர் என அவதாரமெடுத்து இப்போது அதுவும் மைக்ரோ எஸ் டி கார்டுக்கு மாறிவிட்டது. இன்னும் இது போல எத்தனையோ மாற்றங்கள். அது போலத்தான் இதுவும். இனி சுற்று சூழலை கருத்தில் கொண்டு மின் வாகனங்களுக்குத்தான் மாறியாகவேண்டிய கட்டாயம். இன்னும் வருங்காலங்களில் இதுவும் கடந்து போகும். இதற்காக யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X