பூடானில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

Updated : ஆக 17, 2019 | Added : ஆக 17, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாரோ: இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, பூடான் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடானின் பாரோ விமான நிலையம் சென்ற மோடியை, பூடான் பிரதமர் லோடேய் ஷெரீங் வரவேற்றார். தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.மோடியின் இந்த பயணத்தின் போது, முதல் நாளான இன்று (ஆக.,17) பூடான் மன்னரை சந்திக்க உள்ளார். பின்னர்,நாளை, புத்த
PmModi, Bhutan, பிரதமர் மோடி, பூடான், வரவேற்பு,

பாரோ: இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, பூடான் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பூடானின் பாரோ விமான நிலையம் சென்ற மோடியை, பூடான் பிரதமர் லோடேய் ஷெரீங் வரவேற்றார். தொடர்ந்து, ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


latest tamil news



மோடியின் இந்த பயணத்தின் போது, முதல் நாளான இன்று (ஆக.,17) பூடான் மன்னரை சந்திக்க உள்ளார். பின்னர்,நாளை, புத்த மடத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பல்கலையில் மாணவர்களையும் சந்திக்க உள்ளார். கல்வி உள்ளிட்ட துறைகளில் 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நீர்மின்சக்தி நிலையம் மற்றும் இஸ்ரோ அமைத்துள்ள ஆய்வுக்கூடத்தையும் மோடி திறந்து வைக்க உள்ளார்.


latest tamil news




பூடான் கிளம்பவதற்கு முன்னர் பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவின் ' முதலில் அண்டைநாடு' கொள்கைக்கு, இந்தியா பூடான் ஒத்துழைப்பு முக்கியமான தூணை அமைத்துள்ளது. தனது பூடான் பயணம், இரு நாட்டு உறவை வலுப்படுத்தும் எனக்கூறினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
17-ஆக-201921:43:39 IST Report Abuse
Kunjumani எங்க ஊரில் உலகநாயகன் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தறுதலை இருக்கு. நீங்கள்தான் உண்மையில் உலகநாயகன் எங்கு சென்றாலும் உமக்கு வெற்றியே டூமிலன் வாழும் டாஸ்மாக் தமிழகத்தை தவிர
Rate this:
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
17-ஆக-201912:35:55 IST Report Abuse
Nathan போய்ட்டான் ன்னு நெனச்ச பூடானை நல்லுதவி செய்து சைனா பிடியிலிருந்து திரும்பி வந்துட்டான்னு உலகம் சொல்ல வைத்தவர் நம் பிஎம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X